திபெத்தில் மீத்தேன் வாயுவின் பயன்பாடு
cri
இவ்வாண்டு திபெத்தில் 30 ஆயிரம் மீத்தேன் வாயு வசதிகள் கட்டியமைக்கப்படும். இதன் விளைவாக, ஒரு இலட்த்து 50 ஆயிரம் விவசாயிகளும் ஆயர்களும் மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தலாம். திபெத்தின் கிராமப்புறங்களில் மீத்தேன் வாயு வசதிகளைக் கட்டியமைக்கும் திட்டப்பணி 2006ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. 10 ஆண்டு காலத்தில், முழு தன்னாட்சி பிரதேசத்திலும் 12 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளும் ஆயர்களும் பயன்படுத்தக் கூடிய மீத்தேன் வாயு வசதியின் கட்டுமானம் நிறைவேற்றப்படும். திபெத்தில் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 விழுக்காடு வகிக்கின்றது. சுத்தமான மீத்தேன் வாயுவைப் பயன்படுத்துவது, பலவீனமான சின்காய் திபெத் பீடபூமியின் உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நன்மை பயக்கும்.
|
|