தற்போது, திபெத் பொருளாதாரம் வரலாற்றில் மிக சிறப்பான வளர்ச்சி கட்டத்தில் நுழைந்துள்ளது. இதன் சராசரி அதிகரிப்பு வேகம், 12விழுக்காட்டை தாண்டியுள்ளது. அதே வேளையில், திபெத் பொருளாதாரம், அரசு ஒத்துகீட்டைச் சார்ந்திருப்பதிலிருந்து சொந்த சந்தை இயககத்தில் பயன் பெறுவதற்கு வழிமுறையாக படிப்படியாக மாறுகின்றது.
சின் காய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்துக்கு வருவதுடன், திபெதில் சுற்றுலா துறையின் வளர்ச்சி மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. கடநத் ஆண்டில், திபெத்தில் பயணம் மேற்கொண்ட பயணியர்களின் எண்ணிக்கை, 40 லட்சத்தை தாண்டியுள்ளது. சுற்றுலா வருமானம், 480கோடி யுவானைத் எட்டியுள்ளது.
தவிரவும், கடந்த 5 ஆண்டுகளில், திபெத்தில் வெளிநாட்டு முதலீட்டு தொகை 1150கோடி யுவானை எட்டியதோடு, ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகின்றது.
|