• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-05 19:16:30    
Di Qing எனும் திபெத் இன தன்னாட்சி சோவின் வளர்ச்சி

cri

அண்மையில் செய்தியாளர்கள் சீன தென்மேற்கு பகுதியிலுள்ள Yun Nan மாநிலத்தின் Di Qing எனும் திபெத் இன தன்னாட்சி சோவில் பேட்டி கண்டனர். உள்ளூர் விவசாயிகள் மும்முரமாக பயிர் செய்வது, பல்வேறு காட்சி தலங்களில் சீன மற்றும் வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா பயணம் மேற்கொள்வது முதலிய செழுமையான இணக்கமான காட்சிகள் எங்கெங்கும் காணப்படுகிறன.

கடந்த சில ஆண்டுகளில், கொள்கை, பணித்திட்டம், நிதி முதலிய துறைகளில், Yun Nan மாநிலத்தின் அரசு திபெத் இன பிரதேசத்துக்கு பெரிதும் ஆதரவு அளித்து வருகின்றது. இப்பிரதேசத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக, 2007ம் ஆண்டு, Yun Nan மாநில அரசு, 110கோடி யுவானை ஒதுக்கீடு செய்தது. விவசாய்கள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி ஆண்டு வருமானம், 2006ம் ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட 15.6 விழுக்காடு அதிகமாகும்

தவிரவும், உள்ளூர் கோயில்கள், மதவாதிகள் ஆகியவற்றை, பொதுச் சேவை துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், முக்கிய கோயில்களின் செப்பனிடுதல், மிகப்பல துறவிகளின் வாழ்கை, மருத்துவ சிகிச்சை மற்றும் முதுமைக்கால காப்புறுதி பிரச்சினைகள் அடிப்படையில் தீர்க்கப்பட்டன என்று தெரிய வருகின்றது.