மார்ச் திங்கள் 14ம் நாள் திபெத் லாசாவில் அடிதடி,சீர்குலைத்தல்,கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற கடும் வன்முறை குற்றச் செயல்கள் நிகழ்ந்த பின், உலகின் பல்வேறு நாடுகளிலான சீன மாணவர்கள் இச்சம்பவங்களை வன்மையாக கண்டித்துள்ளனர்.

மார்ச் திங்கள் 29ம் நாள், கனடாவின் டருன்டோவின் நகர மையத்திலுள்ள துன்தாஸ் சதுக்கத்தில், சீன மாணவர்கள் திபெத்தின் உண்மைகளை பிரச்சாரம் செய்து, தாய்நாட்டு ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பது என்ற கூட்டம் நடத்தினர்.
சமூகத்தின் நிதானத்தைச் சீர்குலைப்பது மற்றும் சீனாவை பிளவுப்படுத்தும் எந்த சூழ்ச்சியும், திபெத் மக்கள் உள்ளிட்ட அனைத்து சீன மக்களின் உறுதியான எதிர்ப்பை சந்திக்கும். இது தோல்வியடைவது உறுதி என்று ஜப்பானிலுள்ள சீன மாணவர்கள் நம்புகின்றனர்.
திபெத் சுதந்திரவாதிகளின் கடும் குற்றச் செயல்களுக்கு, சிங்குப்பூரிலுள்ள சீன மாணவர்கள், அறிவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத் துறையினர்கள் வண்மையான கண்டனம் தெரிவித்ததனர். இவ்வன்முறைச் செயல்களை சர்வதேசச் சமூகம் உறுதியாக கண்டித்துள்ளது என்று சிங்கப்பூரிலுள்ள சீன மாணவர் சங்கத் தலைவர் சென்சீ கூறினார்.
|