முன்னுக்குப் பின் முரணான தலாய் லாமா
cri
வரலாற்றை மீளாய்வு செய்து, தலாய் லாமா முன்னுக்குப் பின் முரணானவராக விளங்குவதாகக் கண்டுப்பிடித்துள்ளோம் என்று சின் குவா செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட கட்டுரை கூறுகின்றது. திபெத்தில் தேசிய இன தன்னாட்சியை மேற்கொண்டு, அதன் வெளியுறவு அலுவலகள் நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகின்றது என்று 1951ம் ஆண்டு, நடுவண் அரசும் திபெத் உள்ளூர் அரசுடன் உடன்படிக்கையை உருவாக்கின. 1954ம் ஆண்டு, பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் முதலாவது தேசிய மாநாட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், சுதந்திர மத நம்பிக்கையை திபெத் மக்கள் உண்மையாக அனுப்பவிப்பதாக அவர் கூறினார். கூட்டத்தில் அவர் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலாய் லாமா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பின், தனது பதவியை நடுவண் அரசு 5 ஆண்டு காலமாக நிலைநிறுத்தியது. ஆனால், வெளிநாடுகளில் சீனா எதிர்ப்பு சக்தி மற்றும் பிரிவினை சக்திகளின் துணையுடன், முன்பு தெரிவித்த தனது நாட்டுப்பற்று நிலைப்பாட்டை அத்துமீறி, தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். தலாய் லாமா முன்னுக்குப் பின் முரணானவராக விளாங்குகின்றார்.
|
|