பிரிட்டன் தரப்பின் வரவேற்பு
cri
 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம் நேற்றிரவு இலண்டன் சென்றடைந்தது. ஒலிம்பிக் விவகாரத்துக்குப் பொறுப்பான பிரிட்டன் அமைச்சர் Tessa Jowell, Heathrow விமான நிலையத்துக்குச் சென்று ஒலிம்பிக் தீபத்தை வரவேற்றார். இலண்டனிலான தீபத் தொடரோட்டத்தில், ஒலிம்பிக் எழுச்சி பரவல் செய்யப்படும் என்று விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது Jowell கூறினார். 2012ம் ஆண்டு, இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தவுள்ளது. ஆகையால், பெய்ஜிங்கிற்கும் இலண்டனுக்கும் இடையில் சிறப்பான உறவு நிலவுகின்றது என்றும், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவுடன் மகிழ்ச்சியாக ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
|
|