அண்மையில், சீன வானொலி நிலையத்தின் 39 அந்நிய மொழி இணைய தளங்களில் மார்ச் திங்கள் திபெத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய உண்மையை செய்தி வெளியிட்டன. பல்வேறு நாடுகளின் இணையத்தைப் பயன்படுத்துவோர், இணையம், கடிதம், தொலைபேசி ஆகிய முறைகளின் மூலம், தனது கருத்துகளை தெரிவித்தனர்.
லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை சம்பவம், திபெத்தின் அமைதியையும் நிதானத்தையும் சீர்குலைத்தது என்று இத்தாலியர் ஒருவர் தனது மின்னஞ்சலில் கூறினார்.
ஜெர்மனியைச் சேர்ந்த Helmut Matt என்பவர் அனுப்பிய பின்னஞ்சலிலில், பெய்சிங் ஒலிம்பிக விளையாட்டு போட்டியையும் சீனாவின் சர்வதேச புகழையும் சீர்குலைக்கும் வகையில், சீனாவுக்கு எதிரான சக்தியும் திபெத் சுதந்திர சக்தியும் இவ்வன்முறை சம்பவத்தை முன்கூடியே நன்கு திட்டமிடப்பட்டன என்று தெரிவித்தார்.
தவிரவும், ஸ்பெயின், செக், Monaco முதலிய நாடுகளின் மக்கள், மின்னஞ்சல்களின் மூலம், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை அரசியல் மயமாக்குவதற்கு எதிரிப்பு தெரிவித்தனர். தலாய் லாமா குழுவின் மட்டமான பண்புகளை தெரிந்துகொண்டனர். சீன அரசின் தொடர்புடைய நடவடிக்கைகளை ஆதரிப்பதோடு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடைபெறும் திறமை சீனாவுக்கு உண்டு என்பதை அவர்கள் நம்புகின்றனர்.
|