
லாசாவிலான மார்ச் 14ம் நாள் வன்முறைச் சம்பவங்களுக்கு, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு மத இடங்களிலான இயல்பான மத நடவடிக்கைகள் படிப்படியாக மீட்கப்பட்டுள்ளன. பொது மக்களின் சுதந்திர மத நம்பிக்கை முழுமையாக உத்தரவாதம் செய்யப்படுகின்றது.
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தேசிய இன மற்றும் மத விவகார ஆணையத்தின் துணை தலைவர் நாபோய் ஜிந்யூன் இதை தெரிவித்தார்.
தவிர, துறவிகளின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்யும் வகையில், உள்ளூர் அரசு அவர்களை சமூக காப்புறுதி அமைப்பு முறையில் சேர்த்தது. இவ்வாண்டின் துவக்கத்தில், 50க்கும் மேலான மதவாதிகள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் புதிய அரசியல் கலந்தாலோசனை மாநாட்டின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுள்ளனர் என்று அறியப்படுகிறது.
|