புசுமையான வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பு, தாது பொருட்கள், சுற்றுலா பயணம், திபெத்தின மருந்துகள், தேசிய இனங்களின் கைவினைப் பொருட்கள் முதலிய பீடபூமியிலான சிறப்புத்தொழில்களை வளர்ப்பதன் மூலம், திபெத் பொருளாதார வளர்ச்சியில் மாபெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் உதவியுடன், மொத்த 170க்கும் அதிகமான தனிச்சிறப்பு மிக்க வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புத் திட்டப்பணிகள் வளர்க்கப்பட்டுள்ளன. கனிம அகழ்வில் பெரும் முன்னேற்றம் பெறப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு சுற்றுலா வருமானம், மொத்த பிரதேசத்தின் உற்பத்தி மதிப்பில் 14விழுக்காடு வகித்தது. தற்போது, இது திபெத் பொருளாதாத்தின் தலைமை தொழிலாக மாறுகிறது என்று தெரிய வருகிறது.
எதிர்காலத்தில், சுரங்கத்தொழில், திபெத்தின மருந்து, கட்டிடம் மற்றும் கட்டிடப் பொருள் ஆகிய தொழில்களை வளர்ப்பதில், உண்மை முன்னேற்றம் பெற திபெத் முயலும். சுற்றுலா அடிப்படை வசதிகள் மற்றும் இதற்கு இசைவான வசதிகளை மேம்படுத்தப் பாடுபடும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் சியாங்பா புன்கோ தெரிவித்தார்.
|