அமெரிக்க நாடாளுமன்றத்தின் தொடர்புடைய உறுப்பினர்கள், உண்மைகளுக்கு மதிப்பு அளித்து, தப்பு எண்ணங்களைக் கைவிட்டு, தலாய் லாமாக் குழுவின் உண்மையான தோற்றத்தைத் தெரிந்து கொண்டு, திபெத்துடன் தொடர்புடைய கருத்துருகளை முன்னேற்றுவதை நிறுத்த வேண்டும். சீன மக்களின் உணர்வைப் புண்படுத்தி, சீன-அமெரிக்க உறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று சீனா விருப்பம் தெரிவிப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சியங் யூ இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் சில உறுப்பினர்கள் முன்வைத்த தொடர்புடைய கருத்துருகள், லாசாவிலான வன்முறை சம்பவங்களை நடத்திய குற்றவாளிகளையும் தலாய் லாமாக் குழுவையும் சுமத்தாதது. அதற்குப் பதிலாக, சீன அரசு மற்றும் மக்களைக் குற்றக் கூறியுள்ளன. இது, உண்மைக்கு புறப்பானதாகும் என்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது, ச்சியங் யூ தெரிவித்தார்.
திபெத் சுதந்திரம் என்ற கருத்தை, தலாய் லாமா உண்மையாகவே கைவிட்டு, தாய் நாட்டைப் பிளவுபடுத்துகின்ற நடவடிக்கைகளையும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சீர்குலைகின்ற நடவடிக்கைகளையும் நிறுத்தி, திபெத் மற்றும் தைவான் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என்பதை ஏற்றுக்கொண்டால் தான், சீன நடுவண் அரசு அவருடன் தொடர்ந்து கலந்தாலோசனை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
|