• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-07 16:24:37    
fuzhou நகர மாணவர்களின் கனடா மாமா

cri
சீனாவின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள fujian மாநிலத்தின் தலைநகரான fuzhou நகரத்தில், தன்னை fuzhou வாசியாக கூறிக்கொள்ளும் கனேடியர் ஒருவர் வாழ்கிறார். அவரது பெயர் பிரையன் .ஏ. ஹாட்ஜ்.

72 வயதான brain a hodge, கனடா நாட்டின் ராக்கி மவுண்டன் மருந்து நிறுவனத்தைச் சேர்ந்த fuzhou கிளை நிறுவனத்தின் தலைவராவார். கடந்த சில ஆண்டுகளில், சீனாவுக்கும் கனடாவுக்குமிடையிலான தொழில் நிறுவனங்களின் தொடர்பை அவர் ஆக்கப்பூர்வமாக தூண்டுகின்றார். இதற்காக, சீன அரசு வழங்கிய தேசிய நட்புறவுப் பரிசை அவர் பெற்றார். தவிர, சீனக் கல்வி இலட்சியம் குறித்து அவர் அதிக ஆர்வம் கொள்கிறார். சீன மாணவர்களின் ஆங்கில மொழி நிலையை உயர்த்தும் வகையில், Fuzhou நகரத்தில் பல பள்ளிக்கூடங்களில் ஆங்கில மொழி விரிவுரைகளை அவர் நடத்தினார். அவர் கூறியதாவது:

நேயர்களே, சீனாவிலுள்ள வாழ்க்கை மற்றும் பணி பற்றிய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததில் பெறுவதை நான் மகிழ்கிறேன் என்று அவர் கூறினார்.

70 வயதைத் தாண்டிய போதிலும், அவரின் நிறுவனம் பற்றி கூறும் போது பிரையன் மிகுந்த ஆர்வம் கொள்கிறார். அவர் கூறியதாவது:

மருந்து விற்பனையில் எமது நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கனடாவின் குணசிங்கி சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது எமது நிறுவனத்தின் முக்கிய வணிகமாகும். பதனீடு செய்யப்பட்ட பின், சீனச் சந்தையில் குணசிங்கி விற்பனை செய்யப்படும் என்றார் அவர்.

கடந்த 80ம் ஆண்டுகளில், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி துவங்கிய போது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தைச் சேர்ந்த பொருளாதார வளர்ச்சி வாரியத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவின் தலைவர் பதவி வகித்த பிரையன் சீனாவுக்கு வந்தார். எனவே, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை, சீனாவுக்கு கொண்டு வந்துள்ள பெரிய மாற்றங்கள் அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளன. அவர் கூறியதாவது:

1984ம் ஆண்டு, நான் முதல் முறையாக சீனாவுக்கு வந்தேன். 1987ம் ஆண்டு, நான் இரண்டாவது முறை வந்தபோது சீனாவிலான மாபெரும் மாற்றங்களை கண்கூடாகக் கண்டேன். கடந்த 90ம் ஆண்டுகளில், சீனாவின் நிலைமை மேலும் சீரானது என்று அவர் கூறினார்.

கடந்த 90ம் ஆண்டுகளில், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், கனடாவின் ராக்கி மவுண்டன் குணசிங்கி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிய பகுதியின் மேலாளர் பதவி வகித்த பிரையன் சீனாவுக்கு மீண்டும் வந்தார். சோதனைப் பணியை மேற்கொண்ட பின், fujian மாநிலம், சீனாவின் குணசிங்கி தொழில் துறையின் மையமாக இருப்பதை அவர் கண்டறிந்தார். எனவே, fujian மாநிலத்தில் குணசிங்கி தயாரிப்புத் தளத்தைக் கட்டியமைக்கலாம் என கனடா நாட்டு நிறுவனத்தினரிடம் ஆலோசனையை முன்வைத்தார். அவர் கூறியதாவது:

இங்குள்ள சந்தையின் அடிப்படை வசதிகள் மிகவும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. உழைப்பாற்றலின் அடிப்படை மிகவும் அதிகமானது. fujian மாநிலம் மற்றும் fuzhou நகரத்தின் அரசுகளும் எனக்குப் பெரிதும் ஆதரவு அளித்து வருகின்றன என்றார் அவர்.

இருப்பினும், சீனாவில் முதலீடு செய்வதில் அவர் தடைகளை எதிர்கொள்ளாமல் இல்லை. சில பிரச்சினைகளில் அவர் சிக்கிக்கொண்டார். சீனாவில் வணிகத்தில் எப்படி ஈடுபடுவது என்பது அவருக்கு தெரியவில்லை.

அதற்குப் பின், இந்நிறுவனத்தின் நடப்பு தலைமை மேலாளர் jiangshaoshu இன் உதவியுடன், ஒரு சிறப்பு பணிக் குழு உருவாக்கப்பட்டது. அதன் பின், இந்நிறுவனம் புதிய முன்னேற்றங்களைப் பெற்றது. அவர் கூறியதாவது:

எமது நிறுவனத்தின் தலைமை மேலாளர், ஒரு சிறந்த மேலாளர் ஆவார். அவர் 17 ஆண்டுகால நிர்வாக அனுபவங்களைக் கொண்டவர். அவரது அனுபவங்களுடன், ஒரு சிறந்த பணிக்குழு உருவாக்கப்பட்டது. எங்கள் நிறுவனம் புதிய நிலத்தை வாங்கியுள்ளது. புதிய தொழிற்சாலையை கட்டியமைக்க வேண்டும். அப்போதுதான், சீனாவில் அருமையான எதிர்காலத்தை பெற முடியும் என்று அவர் கூறினார்.

தவிரவும், கடந்த சில ஆண்டுகளில், சீன மற்றும் கனடாவின் பொருளாதார பரிமாற்றத்தை முன்னேற்றுவதில் பிரையன் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்று வருகிறார். பரிமாற்றக் குழுவை உருவாக்கி, கனடாவில் பயணம் மேற்கொள்ள fuzhou நகரத்தின் உள்ளூர் அரசுக்கு அவர் உதவி செய்தார். இப்பரிமாற்றக் குழு, கனடா நாட்டு வணிகர்களை சந்தித்து, fujian மாநிலம் மற்றும் fuzhou நகரத்தின் வணிக வாய்ப்பை அவர்களிடம் பரிந்துரை செய்தது. அவர் கூறியதாவது:

நான் fuzhou வாசியாக மாறியுள்ளேன். எமது நிறுவனம் இங்கு உள்ளது. என் வீடு இந்நகரத்தில் அமைந்துள்ளது. Fuzhou நகரத்தில் வாழ்வதால், எமது நிறுவனத்துக்கு உதவி செய்ய பாடுபட வேண்டும் என்றார் அவர்.

தீவிர முயற்சியின் மூலம் பிரையன் புகழ்களைப் பெற்றார். 1999ம் ஆண்டு, fujian மாநிலத்தால் நட்புறவுப் பரிசு அவருக்கு வழங்கப்படட்டது. 2001ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை, fuzhou நகரத்தின் சர்வதேச நட்புறவுப் பரிசை அவர் பெற்றார். 2003ம் ஆண்டு, சீன அரசின் நட்புறவுப் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.

தவிர, கல்வி இலட்சியத்திலும் பிரையன் மிகுந்த ஆர்வம் கொள்கிறார். அவர் கூறியதாவது:

வார இறுதியில், பல மாணவர்கள் என் வீட்டுக்கு வந்து, என்னுடன் பேச்சு ஆங்கில பயிற்சியைச் செய்கின்றனர் என்றார் அவர்.