• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-07 17:08:31    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆதரவு

cri

பெய்சிங் ஒலிம்பிக் போட்டியை அரசியல் மயமாக்குவது, இப்போட்டியை புறக்கணிப்பது ஆகியவை குறித்து, அரசியல் தலைவர்களும், சர்வதேத ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகளும் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் தாங்கள் நிகழ்த்திய உரைகள், விமர்சனங்கள் மற்றும் அறிக்கைகளில் தங்களது எதரிப்பை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் Rogge மார்ச் திங்கள் 5ம் நாள் சிங்கப்பூரில் பேசுகையில், 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பெய்சிங்கில் நடைபெறுவது என்பது பகுத்தறிவு வாய்ந்த தெரிவாகும் என்று கூறினார். ஒலிம்பிக் போட்டிக்கான பெய்சிங் ஒலிம்பிக் குழுவின் ஆயத்தப் பணிகளுக்கு அவர் மனநிறைவு தெரிவி்த்தார். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் Hein Verbruggen மார்ச் 3ம் நாள் பெய்சிங்கில் பேசுகையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை அரசியல் மயமாக்குவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, அரசியல்வாதிகளுக்கானதல்ல பாறாக விளையாட்டு வீரர்களுக்கான நிகழ்ச்சியாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். திபெத் பிரச்சினை, விளையாட்டுத்துறையுடன் தொடர்புடையதல்ல. இது, அரசியல் பிரச்சினையாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கௌரவத் தலைவர் Samaranch அண்மையில் தெரிவித்தார்.தவிரவும், கம்போடிய தலைமை அமைச்சர் Hun Sen, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Smith, ஜப்பான் தலைமை அமைச்சர் Fukuda Yasuo, கனடா தலைமை அமைச்சர் Stephen Harper முதலிய அரசியல் தலைவர்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை புறக்கணிப்பதை எதிர்த்தனர்.