லாசாவிலான மார்ச் 14ம்நாள் வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு, உழைப்பு மற்றும் சமூகக் காப்புறுதிக்கான முன்னுரிமை கொள்கையை வழங்குவது, உத்தரவாதம் செய்யப்படும். இது குறித்து, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் உழைப்பு மற்றும் சமூகக் காப்புறுதி ஆணையம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
வேலையின்மை உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் இலக்கும் நிபந்தனையும், அறிக்கையில் விதிக்கப்பட்டன. விதிகளின் படி, மார்ச் 14ம்நாள் வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களும் தொழிலாளர்களும் இக்கொளையில் சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட நிலைக்கு ஏற்ப, அவர்கள் 3, 6, அல்லது 12 திங்கள் கால வேலையின்மை உதவித் தொகையை பெறுவர் என்று அறியப்படுகிறது.
|