இவ்வாண்டு திபெத்தின் உயர் கல்வி நிலையங்களிலிருந்து 11ஆயிரம் பேர் பட்டதாரிகள் ஆவர். இந்த எண்ணிக்கை 2007ம் ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட 3000 அதிகமாகும். இது திபெத்தின் உயர் கல்வி வரலாற்றில் மிக உயர்வான எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புப் பணி பன்முகங்களிலும் துவங்கியுள்ளது. அரசு பணியாளர்கள் மற்றும் சிறப்பு தொழில் நுட்பப் பணியாளர்களை சேர்ப்பதன் மூலம், 9400 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். இது, மொத்த பட்டதாரிகளின் எண்ணிக்கையில் 80விழுக்காடு வகிக்கிறது என்று திபெத் தன்னாட்சி பிரதேச கல்வி ஆணையம் அறிமுகப்படுத்தியது.
|