பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்டத்தைச் சீர்குலைக்க முயன்ற சில திபெத் சுதந்திரவாதிகளை, பிரிட்டனின் இலண்டன் காவற்துறை நேற்று கைது செய்தது. அவர்களின் கெட்ட செயல்கள் குறித்து, உள்ளுர் மக்கள் பலர் பேராத்திரம் தெரிவித்தனர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்பு குழுவின் தீபத் தொடரோட்ட மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இதற்கு வண்மையான கண்டனம் தெரிவித்தார். ஒலிம்பிக் தீபம், உலகின் மக்களுக்கு உரிமையானது. பொது மக்களின் பெரும் கோபத்திற்கு உள்ளானதால், ஒலிம்பிக் எழுச்சியை கடுமையாக மீறிய இந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கை, தோல்வியடைவது உறுதி என்று அவர் கூறினார்.
|