• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-08 09:19:18    
திபெத் சுதந்திரத்துக்கான கண்டனம்

cri
திபெத் சுதந்திரம் விரும்பும் பிரிவினைவாதிகள், இலண்டன் மற்றும் பாரிஸிலுள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தைச் சீர்குலைப்பதை சீனத் தரப்பு, வன்மையாகக் கண்டித்தது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ச்சியங் யூ அம்மையார் இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார். இது பற்றி, செய்தியாளருக்குப் பேட்டியளிக்கும் போது, அவர் இவ்வாறு கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளாயாட்டுப் போட்டி, உலக மக்களின் பொது விளையாட்டுப் போட்டியாகும். ஒலிம்பிக் தீபம், உலக மக்களின் தீபமாகும். ஏப்ரல் திங்கள் 6 மற்றும் 7ம் நாள், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் பொது மக்களின் உற்சாகமான வரவேற்பில், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் லண்டன் மற்றும் பாரிஸ் கடமைகள் பாதுகாப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

திபெத் சுதந்திரம் விரும்பும் பிரிவினைவாதிகள், ஒலிம்பிக் எழுச்சி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சட்டங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், வேண்டுகேன்றே ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தைச் சீர்குலைப்பதற்கு, சீனத் தரப்பு வன்மையான கண்டனம் தெரிவித்தது. இச்செயல், புனித ஒலிம்பிக் எழுச்சியை இழிவுபடுத்துவதாகும். இது, ஒலிம்பிக் விளையாட்டை விரும்புகின்ற உலக மக்களுக்கு, ஒரு ஆத்திரமூட்டலாகும். ஒலிம்பிக் தீபம் பெற்ற ஒலிம்பிக் எழுச்சி, அமைதி, நட்புறவு, முன்னேற்றம் என்ற கருத்துக்கள், எவராலும் தடுக்க முடியாது என்று சீனா நம்புவதாகவும் அவர் கூறினார்.