• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-08 10:17:43    
புத்தர் கோயில் (ஆ)

cri

Da fo என்னும் புத்தர் கோயில் கற்குகையின் வாயிலின் வெளியே, மேற்கு பக்கத்திலுள்ள ஒரு கற்படிக்கட்டின் மூலம், மேல் சென்று, வேறு ஒரு கோயில் வாய்லாக, Luo Han என்ற குகைகளில் நுழையலாம். இங்கு, நான்கு வடக்கு திசையை நோக்கிய சிறு கற்குகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கற்குகைகளின் ஆழம், உயரம் மற்றும் வடிவத்தில், வேறுபட்டன. மேற்கிலிருந்த மூன்றாம் குகையை தவிர, பிற மூன்று குகைகளிலும், பல புத்தர் சிலைகள் இருக்கின்றன. அவற்றின் மாதிரிகள், மிக அழகாகவும், சிற்ப கலை வடிவத்திலும், தலைசிறந்தாகவும் இருக்கின்றன.

Luo Han குகையின் கிழக்கு நோக்கி சென்றால், Qian fo என்னும் குகைகள் இருக்கின்றன. இக்குகைகளில், சில உறுதியான புத்தர் சிலைகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர, சுவர்களில் செதுக்கிய சிலைகள் பல உள்ளன. மனித சிலைகள் மற்றும் உருவப்படங்கள், உயிர்த்துடிப்புடன் காணப்படுகின்றன.

Da fo குகையில், தாங் வம்சகாலத்தின் ஆரம்பிலான தலைசிறந்த சிற்ப கலையை முழுவதுமாக, கண்டுகளிக்கலாம். அதைத் தவிர, அதன் அளவு, கட்டிடக் கலையில் அது பெற்றுள்ள சாதனை முதலியவை, ஆச்சரியமடைய செய்கின்றன. அவை, ஷான்சி மாநிலத்தில், பெருமளவிலான ஒரே குகைகளாகும்.

அது, மாநில நிலை தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவாகவும் உள்ளது.