• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-08 15:22:29    
பெயர்களின் வகைகள் (ஆ)

cri

 

பொதுவாக குடும்பப்பெயர்கள் ஒற்றை எழுத்தை அல்லது அசையை கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக வாங், ஷாங், ஷாவ் ஆகியவை தமிழில் எழுதினால்தான் இரண்டு எழுத்து, சீன மொழியில் இவற்றை எழுத ஒரே எழுத்து போதும். இரட்டை அசை பெயர்களும் உள்ளன. உதாரணமாக ஓவ்யாங், ஷுகெ, சுமா, குங்சுன் முதலியவை.

ஆக இப்படி ஒற்றையும் இரட்டையுமாக எழுத்துக்கள் அல்லது அசைகள் கொண்ட 438 குடும்பப்பெயர்கள் பாய் ஜியா சிங் நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 408 பெயர்கள், ஒற்றை அசை அல்லது ஒற்றை எழுத்து பெயர்களாகும். எஞ்சிய 30 பெயர்கள் இரட்டை அசை பெயர்கள். இந்நூலின் உண்மை வடிவம் காணாமல் போய்விட்டது. காணாமல் போன அந்த உண்மை வடிவத்தில் இதன் ஆசிரியர் சில குடும்பப்பெயர்களையும், அப்பெயர் கொண்ட சில வரலாற்று சிறப்புமிகு நபர்களையும் ஒரு சேர குறிப்பிட்டிருந்தாராம். அதாவது மேல்பக்கத்தில் புகழ்பெற்ற நபரின் படமும். பக்கத்தின் கீழ்பகுதியில் குடும்பப்பெயர்களும் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது. இந்நூல் மிகப் பிரபலமான ஒன்றாக இருக்க இதுவும் ஒரு காரணம் என்று அறியப்படுகிறது.

இது தவிர, கி. பி. 627ம் ஆண்டு தங் வம்சக்காலத்தில் பேரரசர் தங் தாய் சொங், அரசு அதிகாரியான காவ் ஷுலியன் என்பவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யுமாறு பணித்தாரென்று கூறப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின் போது மொத்தம் 593 வெவ்வேறு குடும்பப்பெயர்கள் வழமையில் இருந்தது கண்டறியப்பட்டதாம்.

குடும்பப்பெயர்கள் பற்றி சில சுவையான தகவல்கள்:

1) முன்னர் குறிப்பிட்டது போலவே, சீனர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிடும்போது, குடும்பப்பெயரை முதலிலும், சூட்டப்பட்ட பெயரை அடுத்துமாக கூறுவார்கள். எடுத்துக்காட்டாக ஷாங் வெய் என்பது ஒருவரது முழுப்பெயர் என்றால், ஷாங் குடும்பப்பெயர், வெய் சூட்டப்பட்ட அல்லது இடப்பட்ட பெயர். நெருங்கிய உறவுகள், நண்பர்கள், நன்றாக அறிந்தவர்களிடையில் பொதுவாக பெரியவரை, வயதில் முதியவரை குறிப்பிடும்போது "லாவ்" என்று சொல்லி அவரது பெயரை கூறும் வழக்கம் சீனாவில் உண்டு. "லாவ்" என்பது முதிய என்று பொருள்படும். முன்னர் கூறிய பெயரோடு இதை பயன்படுத்தினால் "லாவ் ஷாங்", அதாவது முதிய ஷாங். வயதில் இளையோரை அழைக்கையில், லாவ் என்பதற்கு பதிலாக ஷியாவ் என்று கூறிப்பிட்டு அழைக்கின்றனர். ஷியாவ் என்றால் சிறிய / இளைய என்று பொருள். எனவே ஷாவ் குடும்பத்தில் முதியவரை லாவ் ஷாங் என்று அழைக்கும்போது அவரது பேரனை "ஷியாவ் ஷாங்" என்று குறிப்பிடலாம். இல்லையெனில் குடும்பப்பெயரை தவிர்த்து சூட்டப்பட்ட பெயரை அனைவருக்கும் பயன்படுத்தலாம்.

2) பண்டைக்காலத்தில் பேரரசனுடைய பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. பேரரசரை பெயரை கொண்டவர்கள் இருப்பின் அவர்களுக்கு தண்டனை உண்டு, சில சமயங்களில் அது மரணமாகவும் இருக்கலாமாம். மேறு ஹான் வம்சக் காலத்தில் லியு பாங் பஎன்பவர் பேரரசன் ஆனபோது பாங் என்ற அசை கொண்ட பெயருடையவர்கள் அனைவரும் தங்களது பெயரை மாற்றுமாறு பணிக்கப்பட்டனராம்.