• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-08 09:21:54    
கடிதம் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக கருத்துக்களை

cri

வாணி: நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு, கடிதம் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக கருத்துக்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளும் உங்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
க்ளீட்டஸ்: சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி குறித்து உத்திரக்குடி கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். வான்மதி அவர்கள் மிதிவண்டி மீதான சீன மக்களின் பாசம் பற்றி நிகழ்ச்சியில் கூறினார். உடலுக்கும் உள்ளத்திற்கும் உடற்பயிற்சி மூலம் நன்மை பெற மிதிவண்டி உதவுகிறது. உலகில் பல்வேறு அமைப்புகளுக்கு சங்கம் அமைத்து செயல்படுகிறார்கள். ஆனால் சீனாவில் மிதிவண்டிக்காக சங்கம் அமைக்கப்படுள்ளது என்பதை கேட்டபோது தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அமைப்புகள் அவசியம் என்று உணர முடிந்தது.


வாணி: நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி கீழ்குந்தா நேயர் கே. கே. போஜன் எழுதிய கடிதம். எஸ். எம். ரவிச்சந்திரன் நிகழ்ச்சியில் கூறியது போல் சீனாவில் இந்த முறை பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றி 38 மொழிகளில் விளையாட்டுச் செய்திகளை சீன அரசு அளிக்கும் என்பது உலக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பாகும்.
க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி நேயர் க. மு. பாத்திமா ரிகாஸா எழுதிய கடிதம். நான் தொடர்ந்து சீன வானொலியை கேட்டு வருகிறேன். சீன வரலாற்றுச் சுவடுகள், நேயர் விருப்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை விரும்பி கேட்டு வருகிறேன். குறிப்பாக வியாழனறைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியை தவறாமல் கேட்கிறேன். கல்விக்கு பயனாய் அமையும் முன் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்பேன். சீன வானொலி நேயர் குடும்பத்தில் நானும் இணைந்ததில் மகிழ்ச்சி.


வாணி: அடுத்து பாலக்காடு டி. வி. ராமசாமி எழுதிய கடிதம். செய்திகளில் பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கான 31 விளையாட்டு அரங்குகளும்,45 பயிற்சி அரங்குகளும் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளன என்று கேட்டு மகிழ்ந்தேன். ஒலிம்பிக் பற்றிய செய்திகளை மிக ஆர்வமுடன் கேட்டு வருகிறேன். நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பதக்க பட்டியலில் சீனா முதலிடம் பெறவேண்டும் என்பது என் ஆவல்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து இசை நிகழ்ச்சி பற்றி ஈரோடு சங்கு நகர் வெ. ராஜேஸ்வரி எழுதிய கடிதம். திலகவதி அவர்கள் ஆனந்தக்குரல் என்ற ஒலிநாடாவிலிருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாடல்களை வழங்கினார். குழந்தைகளின் குரலில் இப்பாடல்கள் தேனாக, தெவிட்டாத மகிழ்ச்சியை அளித்தன. ஒலிநாடாவை தயாரித்தவர்கள், பாடல்களை பாடிய குழந்தைகள், அவற்றை எங்களுக்காக ஒலிபரப்பிய சீன வானொலி அனைவருக்கும் என் பாரட்டுக்கள்.


வாணி: அடுத்து கடையாலுருட்டி எம். பிச்சைமணி எழுதிய கடிதம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பெய்சிங் மாநகரில் மட்டும் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிந்தேன். மேலும் சீன வானொலி நிலையத்திலிருந்து தியென் ஆன் மன் சதுக்கம் செல்ல 30 நிமிடங்கள் ஆகும் என்று அறிந்தேன். மேலும் சீனாவின் முக்கிய விழாக்கள் குறித்தும் அன்றைய நிகழ்ச்சியில் தெளிவாக அறியமுடிந்தது. நன்றி.
க்ளீட்டஸ்: இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் இன்றைய உலகம் தொழில்நுட்பத் துறையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அறிய முடிந்தது. பெண்ணடிமை முறியடித்து இன்றைக்கு ஆண்களும் முக்கிய பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது, இணையதளம் மூலம் பொருட்கள் வாங்குவது, வீடு வசதி மற்றும் வர்த்தக்துறையிலான பல்வேறு மாற்றங்களை நிகழ்ச்சியின் மூலம் அறிந்தோம்.


வாணி:
.......திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி......
மார்ச் திங்கள் 18ம் நாள் அன்று இடம் பெற்ற செய்தியினை கேட்டேன் திபெத்தில் மீண்டும் அமைதி நிலமை திரும்பி இருப்பதை அறிந்தேன். உலகில் நல்லெண்ணம், அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை அரசியலாக்க கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை வலியுறுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன். மேலும் திபெத் பிரச்சனை காரணமாக சீன இந்திய உறவில் விரிசல் ஏற்படாது என்று சீன அரசுத் தலைவர் திரு வென்ஜியாபாவ் அவர்கள் அறிவித்திருப்பது இரு நாடுகளின் உறவு மென்மேலும் வலுப்பெற உதவும் என்றால் மிகையாகாது பாராட்டுக்கள்.


......திருப்பூர் இரா.சின்ன‌ப்ப‌ன்......
'சீனாவில் இன்பபயணம்' நிகழ்ச்சியில் சீனாவில் இந்திய உணவுவிடுதி நட‌த்திவரும் ஜோசப் அவர்களைப் பற்றிய நிகழ்ச்சியின் மூலம் இந்திய உணவுகளுக்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு உள்ளதை அறியமுடிந்தது. மேலும் சீனமக்களின் ஆதரவினால் உயர்ந்துவரும் திரு.ஜோசப் தமது வாழ்நாள் முழுவதும் சீனாவிலேயே தங்கிவிட முடிவு செய்துள்ளதின் மூலம் சீனமக்களின் அன்பான ஒத்துழைப்பு பற்றி உயர்வான கருத்துகள் மனதில் தோன்றுகிறது.


……ஊட்டி எஸ்.கே.சுரேந்திரன்……
2008.03.26 புதன் அன்றைய விளையாட்டுச் செய்தியில். 24ம் நாள் பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் புனிதத்தீ கிரேக்க பண்டைக்கால ஒலிம்பிய சிதிலத்திலிருந்து ஏற்றப்பட்டதையும், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்ட துவக்கத்தை இது காட்டுவதையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மேலும் பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் மூலம் பல்வேறு நாட்டு மக்களுடனான நட்புறவையும்,ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டுமென சீனா விரும்புவதாக சீனத் தலைமை அமைச்சர் திரு. வென் சியா பாவ் அவர்கள் கூறிய கருத்துக்களையும் கேட்டேன். உலக நாடுகளுடன் கைகோர்த்து பெய்சிங் ஒலிம்பிக் போட்டியை வரலாற்று சாதனை படைக்கும் வகையில் நடத்த விரும்பும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.


……வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்……
மார்ச் திங்கள் 27 ஆம் நாள் இடம்பெற்ற செய்திகளை கேட்டேன். செய்திகளின் இடையே பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்தகைய வழிமுறை மூலம் போட்டி பற்றிய தகவல்களை கூடுதலாக அறிந்து கொள்வதுடன், அதன் மீதான எங்களின் எதிர்பார்ப்பும் பல்கிப் பெருகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கும் முன், செய்திகள் மூலமாக முக்கிய செய்திகளை வழங்கிக் கொண்டு வருவதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்து, அமெரிக்க அரசுத் தலைவரும், சீன அரசுத் தலைவரும் தொலைபேசி மூலம் நடத்திய முக்கிய பேச்சு விவரத்தின் உள்ளடக்கத்தையும் அறிந்து கொண்டேன். அண்மையில் நடந்த லாசா நகர வன்செயல்களின் அடிப்படையற்ற போக்கை, இப்பேச்சுவார்த்தையின் போது, புஷ் அவர்கள் புரிந்து கொண்டிருப்பார் என நம்புகின்றேன். மனித உரிமையை அச்சுறுத்தும் எந்த நடவடிக்கையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என உறுதியாக தெரிவித்த சீன அரசுத் தலைவருக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சர்வதேச தமிழ்ப்பணி மன்றம், பொன் ஏழிசை வல்லபி
மார்ச் திங்கள் 11 ஆம் நாள் இடம்பெற்ற •சீனப் பண்பாடு• நிகழ்ச்சியைக் கேட்டேன். இன்றைய நிகழ்ச்சியின் மூலம் பண்டைக்காலக் குடும்பங்களில் காணப்படும் சில பழக்கவழக்கங்கள் பற்றி சுவைபட கூறப்பட்டது. குறிப்பாக, இந்திய குடும்பத்திற்கும், சீன குடும்பத்திற்கும் இடையே, பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை அறிந்து வியப்படைந்தேன். ஆண்வாரிசு தேவை என்ற கண்ணோட்டம் பண்டைக்கால சீனாவில் இருந்தபோதிலும், தற்போது அந்த நிலை மாறிவிட்டது என நான் நினைக்கிறேன். ஆனால், இந்தியாவிலோ ஆண் குழந்தை வேண்டும் என்ற உணர்வு இன்றளவும் சமுதாயத்தில் தீவிரமாக நிலவி வருகின்றது.