தலைவர் மாவ்ச்செத்துங்கிடம் 14ம் தலாய்லாமா அனுப்பிய உடன்படிக்கை பற்றிய தமது ஆதரவு மனபான்மை அடங்கிய தந்தி செதியை சீன அரசின் பதிவேட்டு ஆணையம் நேற்று வெளியிட்டது. அமைதி முறையில் திபெத் விடுதலை செய்வது பற்றிய உடன்படிக்கைக்கு தலாய்லாமா தந்தி செய்தியில் தெளிவாக ஆதரவு தெரிவித்தார். அத்துடன் தலைவர் மாவ் மற்றும் நடுவண் அரசின் தலைமையில் தாய்நாட்டின் உரிமை பிரதேச ஒருமைபாட்டை பேணிகாப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
1951ம் ஆண்டு அக்டோபர் திங்களில் தலாய்லாமா தலைவர் மாவிடம் இந்த தந்தி செய்தியை அனுப்பினார். நட்பார்ந்த அடிப்படையில் அமைதியான முறையில் திபெத்தை விடுதலை செய்வது பற்றிய உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. திபெத் உள்ளூர் அரசும் திபெதின மத துறவிகள் மற்றும் மக்களும் அதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைவர் மாவ் மற்றும் நடுவண் அரசின் தலைமையில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மக்கள் விடுதலை படையினர்களுடன் உற்சாகத்துடன் உதவி செய்து ஏகாதிபத்திய சக்தியை திபெதிலிருந்து விரட்டியடிக்கும் என்று தந்தி செய்தியில் தலாய்லாமா தெரிவித்தார்.
|