![]( /mmsource/images/2008/04/08/yi_waijiao.jpg)
தலாய் லாமா அண்மையில் வெளியிட்ட திபெத் மக்களுக்கு என்னும் அறிக்கையில், திபெத்தின் சுதந்திரத்தை நாட விரும்பவில்லை என்றும், நடு நிலையில் ஊன்றி நிற்பதாகவும் தெரிவித்தார். இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ அம்மையார் இக்கூற்றை புறக்கணித்துள்ளார்.
தலாய் லாமா அரசியலும் மதமும் ஒன்றிணையும் அடிமை அமைப்பு முறையின் தலைமை பிரதிநிதி ஆவார். இந்த அமைப்புமுறை மனித குலத்தின் வரலாற்றில் மிக கொடூரமான அடிமை அமைப்பு முறையாகும். விடுதலை பெற்ற பல்லாயிரக்கணக்கான அடிமை மக்களை மீண்டும் இருளில் மூழ்கச் செய்வதே தலாய் லாமாவின் நடு நிலை பாதையாகும் என்று ஜியாங் யூ கூறினார்.
லாசாவில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுடன் தமக்குத் தொடர்பு இல்லை என்ற தலாய் லாமாவின் கூற்றையும் ஜியாங் யூ அம்மையார் மறுத்துரைத்தார்.
|