பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் உலக தீபத் தொடரோட்டம் நேற்று பாரிஸில் நடைபெற்றது. நடப்பு சர்வதேச ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 5வது இடம் பாரிஸாகும். ஒரு சில திபெத் சுதந்திரவாதிகள் தீபத் தொடரோட்டத்தைச் சீர்குலைத்த போதிலும், வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டின் நடுநிலையான நண்பர்களின் ஆதரவில், தீபத் தொடரோட்ட நடவடிக்கை நிறைவேற்றப்பட்டது.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம் நேற்று சிறப்பு விமானம் மூலம் பாரிஸிலிருந்து, அமெரிக்காவின் San Francisco நகர் வந்து சேர்ந்தது. நாளை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத் தொடரோட்ட நடவடிக்கை இந்நகரில் நடைபெறும்.
இது பற்றிய விபரம் இன்றைய செய்திதொகுப்பில் இடம் பெறுகிறது.
|