கடந்த 5 ஆண்டுகளில், திபெத், வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகளின் அடிப்படை வசதி கட்டுமானத்திற்கான ஒதுக்கீட்டுத் தொகை, 230 கோடி யுவானை எட்டியுள்ளது. விவசாயிகள் மற்றும் ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைத் தரம், மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நேற்று, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு வாரியத்திலிருந்து இத்தகவல் பெறப்பட்டது.
இயற்கை மேய்ச்சல் நிலத்துக்கான பாதுகாப்பு மற்றும் கட்டுமானம், தலைசிறந்த பார்லித் தளத்துக்கான கட்டுமானம் முதலிய முக்கிய வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகளின் அடிப்படை வசதித் திட்டங்களை, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள், திபெத்திலுள்ள வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரதேசங்களின் உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பெரிதும் மேம்படுத்தியுள்ளன.
திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வரி வருமானம், தொடர்ந்து 5 ஆண்டுகளாக, 10 விழுக்காட்டுக்கு மேலாக அதிகரித்து வருகிறது. கிராமப்புறச் சுற்றுலா, தேசியக் கைவினைத் தொழில், தனியார் போக்குவரத்து முதலிய வேளாண் சாரா துறைகளின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டுள்ளதால், திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள், மேலும் விரிவாகியுள்ளன.
|