திபெத்திலுள்ள ஒலிம்பிக் புனித் தீப தொடரோட்ட நடவடிக்கைக்கு திபெத் தன்னாட்சிப் பிரதேசம் போதியளவில் தயார் செய்துள்ளது. இந்நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றவது திண்ணம் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் qiangba puncog இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
திபெத்திலுள்ள ஒலிம்பிக் தீப தொடரோட்டம், திபெத் மக்களின் புகழ் மற்றும் கடமையாகும். இந்நடவடிக்கைக்கு, திபெத் மக்கள் பெரிதும் ஆதரவு அளிக்கின்றனர் என்று சீன அரசவையின் செய்தி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். அண்மையில், இலண்டன் மற்றும் பாரிஸில் நடைபெற்ற இந்நடவடிக்கைகளை திபெத்தின் சுதந்திரவாதிகள் சீர்குலைக்க முயன்றார். ஆனால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதை இந்தச் சீர்குலைப்பு நடவடிக்கைகள் மாற்ற முடியாது என்று qiangba puncog தெரிவித்தார்.
தலாய்லாமா குழு திட்டமிட்ட மார்ச் 14ம் நாள் வன்முறை நிகழ்ச்சி, சுமார் 30 கோடி யுவான் மதிப்புள்ள இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆயிரத்து முந்நூறு கடைகளும் அதனால் சீர்குலைக்கப்பட்டுள்ளன என்று திபெத் தன்னாட்சி பிரதேசத் தலைவர் Qiangba Puncog கூறினார்.
|