• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-09 14:48:19    
65 வயதுக்கு மேற்பட்டோருக்கு உதவித் தொகை வழங்கும் கொள்கை

cri
அண்மையில் SHAN XI மாநிலத்தி்ன் SHUO ZHOU நகரில், 65 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரத்துக்கு அதிகமான கிராமவாசிகள், முதன்முறையாக உதவித் தொகையை பெற்றனர். திங்களுக்கு 30 யுவான் உதவித் தொகை, இந்த முதியோருக்கு உண்மையான உதவியை கொண்டு வந்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட கிராமவாசிகளுக்கு வாழ்க்கை உதவித் தொகையை வழங்கும் கொள்கை மேற்கொள்வது என்பது, 2007ஆம் ஆண்டு மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் SHUO ZHOU நகராட்சி மேற்கொண்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

GUO YU MEI என்பவர், SHUO ZHOU நகரில் PING LU பிரதேசத்தின் XIA HONG GOU கிராமத்தில் வாழும் விவசாயி ஆவார். உள்ளூர் அரசு வழங்கிய வாழ்க்கை உதவித் தொகை அண்மையில் அவருக்கு கிடைத்தது. அவரது மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

திங்களுக்கு 30 யுவான் உதவித் தொகை அதிகமானதில்லை, இருந்த போதிலும், GUO YU MEI அம்மையரைப் பொறுத்த வரை, வாழ்க்கையின் நெருக்கடி நிலையை தளர்ச்சி செய்ய முடியும். இவ்வாண்டு 76 வயதான இந்த மூதாட்டிக்கு 3 மகன்களும் 2 மகள்களும் பிறந்தனர். ஆனால் அவரது 5 குழந்தைகளின் வாழ்க்கை வளமாக இல்லை. பல ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட கணவருடன் இணைந்து இன்னல் மிகுந்த வாழ்க்கையை அவர் நடத்த வேண்டியிருக்கிறது.

SHUO ZHOU நகரில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம முதியோர்கள், GUO YU MEI போன்று அத்தகைய வாழ்க்கை நிலையை எதிர்நோக்குகின்றனர். குறிப்பிட்ட முதியோருக்கு வாழ்க்கை உதவித் தொகையை வழங்குவது, பனி பெய்யும் போது நிலக்கரியை வழங்குவது போன்ற உரிய நேரத்திலான உதவியாகும்.

உதவித் தொகையைப் பெற்றுள்ள முதியோர்கள் மகிழ்ச்சியுடன் கூறியதாவது—

"தற்போதைய சமூகம் நல்ல சமூகமாகும். இயலாத முதியோருக்கு உதவி வழங்கப்படுகிறது."

"நான் 180 யுவான் பெறுகின்றேன். 3 பை கோதுமை மாவு வாங்கலாம். அரை ஆண்டுகாலம் சாப்பிட இது எனக்கு போதுமானதாக உள்ளது" என்றார்கள் அவர்கள்.

2006ஆம் ஆண்டு ஜுன் திங்கள் SHUO ZHOU நகராட்சி வெளியிட்ட கொள்கைக்கிணங்க, 65 வயதுக்கு மேற்பட்ட கிராமவாசிகள் அனைவரும் திங்களுக்கு 30 யுவான் உதவித் தொகையைப் பெற முடியும். இக்கொள்கையின் வெளியீடு மற்றும் நடைமுறையாக்கம், இன்னல் மிகுந்த விவசாயக் குடும்பங்களின் நெருக்கடி நிலையை ஓரளவில் தளர்ச்சி செய்துள்ளன.

இவ்வுதவித் தொகையை உரிய நேரத்தில் வழங்காத மற்றும் இதர துறைகளுக்கு பயன்படுத்தும் நிலைமை ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, குறிப்பிட்ட உதவித் தொகை அதற்குரிய கணக்கில் வைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை SHUO ZHOU நகராட்சி வகுத்துள்ளது. அதாவது, நிதி ஒதுக்கீடு பொது நிதித் துறையினால் குறிப்பிட்ட கூட்டுறவு கடன் அமைப்புக்கு வழங்கப்பட்ட பின், உதவித் தொகை பெற வேண்டியவரின் தனிப்பட்ட கணக்கில் வைக்கப்படுகிறது. தகுதியுடைய முதியோர் குறிப்பிட்ட கூட்டுறவு கடன் அமைப்புக்குச் சென்று உதவித் தொகையைப் பெறலாம். SHUO ZHOU நகராட்சியின் பொது துறை அலுவலகத்தின் துணைத் தலைவர் பேசுகையில், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் இந்தக் கொள்கையின் நடைமுறையாக்கத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, நகரம் முழுவதிலும் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

"முதலில் வீட்டில் கள ஆய்வு செய்ய வேண்டும். வீடு வீடாக சென்று பதிவு செய்த பின், சரிபார்ப்பு பணி மேற்கொள்வோம்" என்றார் அவர்.

SHUO ZHOU நகராட்சித் தலைவர் TIAN XI RONG, செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், முதியோரை பராமரிப்பதன் சமூக மயமாக்கம், சீனச் சமூக வளர்ச்சியின் போக்காகும். சமூக முன்னேற்றத்தி்ன் முடிவும் ஆகும் என்று கூறினார். வளரும் நாடு என்ற முறையில், சீனாவின் பொது நிதித் தொகை, அனைத்து முதியோர்களையும் பராமரிப்பதற்கு போதுமானதல்ல. SHUO ZHOU நகராட்சி தன்னால் இயன்ற அளவில் 65 வயதுக்கு மேற்பட்ட கிராமவாசிகளுக்கு உதவித் தொகை வழங்குவது என்பது, மக்களே முதன்மை என்ற ஆட்சி புரியும் கருத்தை உண்மையாக வெளிப்படுத்துவதாகும் என்று அவர் கூறினார்.

"கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட முதியோருக்கான குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாத முறைமை, தற்காலிக நடவடிக்கை அல்ல. சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் பயன்களையும் நன்மைகளையும் பரந்துபட்ட கிராமப்புறங்களில் பரவலாக்கும் முயற்சியே இதுவாகும்" என்றார் அவர்.