• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-09 09:37:35    
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான லண்டன்

cri
லண்டன், பிரிட்டனின் தலைநகரமாகும். இது, பிரிட்டன் தென் கிழக்கு பகுதியிலுள்ள சமவெளிகளில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு 1500 சதுர கிலோமீட்டராகும். அதன் மக்கள் தொகை சமார் 75 இலட்சம் ஆகும். பிரிட்டன் சுருக்கமான லண்டன், ஐரோப்பாவில் பொருளாதார செயல்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்பாகவும் உள்ள

நகரமாகும். 1908, 1948ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை இலண்டன் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 2005ம் ஆண்டு ஜூலை ஏப்ரல் 6ம் நாள், 2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை இலண்டன் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், 6ம் நாள் இலண்டன் சென்றடைந்தது.
பிரிட்டன், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியைப் புறக்கணிக்காது என்று பிரிட்டன் தலைமை அமைச்சர் Brown 5ம் நாள் Watfordஇல் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தாம் பார்வையானராக கலந்துகொள்ள போவதாகவும் Brown தெரிவித்தார்.
நடப்பு சர்வதேச ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 4வது நிலையம் இதுவாகும். Wembley விளையாட்டரங்கிலிருந்து துவங்கிய தீபத் தொடரோட்டம் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவை நிறைவேற்றியது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு முழுவதுமான ஆதரவு

அளிக்கப்படும். அமெரிக்க ஒலிம்பிக் குழுவின் தலைவர் Ueberroth, கிரேக்க ஒலிம்பிக் குழுவின் தலைவர் Kyriakou ஆகியோர் 5ம் நாள் பெய்சிங்கில் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் Liu Qiஐச் சந்தித்துரையாடிய போது, இவ்வாறு தெரிவித்தனர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணிகளில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஒலிம்பிக் குழுவின் தலைவர் Ueberroth கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் கமிட்டியுடனான பரிமாற்றத்தையும்

ஒத்துழைப்பையும் அமெரிக்க ஒலிம்பிக் குழு மேலும் வலுப்படுத்தி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஆயத்தப் பணிகளுக்கு முழுவதுமாக ஆதரவு அளித்து, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெய்சிங் ஒலிம்பிக் கமிட்டியுடனான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் கிரேக்க ஒலிம்பிக் குழு மேலும் வலுப்படுத்தி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு முழுவதுமாக ஆதரவு அளிக்கும் என்று கிரேக்க ஒலிம்பிக் குழுவின் தலைவர் Kyriakou கூறினார்.