• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-09 09:38:58    
கல்லறையிலிருந்த குள்ள நரி

cri

ஜின் வம்ச பேரரசர் ஹுய்யின் முதன்மை அமைச்சராக இருந்தவர் ஷாங் ஹுவா. அந்த காலக்கட்டத்தில் யான் நாட்டு அரசன் ஷாவின் கல்லறைக்கு முன்னே ஒரு குள்ள நரி இருந்தது. உடம்பில் கோடுகள் கொண்டு காணப்பட்ட இந்த குள்ள நரி, நீண்ட நெடுங்காலமாக அந்த கல்லறையில் வாழ்ந்து வந்தது. பல உருவங்களை எடுக்கும் மாயவித்தை கொண்டது இந்த குள்ள நரி. ஒரு நாள் இநத குள்ள நரி அமைச்சர் ஷாங் ஹுவாவை சந்திக்க நினைத்து ஒரு தேர்ந்த அறிஞர் போல் தன்னை மாற்றிக்கொண்டு புறப்பட்டது. செல்லும் முன் கல்லறைக்கு முன்னிருந்த ஒரு மரத்தூணிடம் சென்று தனது யோசனையை சொல்லி, "எப்படி அமைச்சரின் முன் இந்த உருவத்தில் செல்ல இயலுமா" என்று கேட்டது. அதற்கு, "உன்னுடைய நுட்பமான புரிதலின் துணையில் உன்னால் முடியாதது ஒன்றுமில்லை" என்று கூறிய அந்த மரத்தூண் "ஆனால் அமைச்சர் ஷாங் ஹுவா மதிநுட்பம் நிறைந்தவர், அவரை நீ ஏமாற்றுவது கடினமே. நீ அங்கே அவமானப்படுத்தப்படுவாய், உன்னை திரும்ப அனுப்பவும் மாட்டார்கள். நீ உன் இறவாத்தன்மையை இழப்பது மட்டுமல்லாது, நானும் துன்பமடைவேன்" என்று நரியிடம் சொன்னது.


ஆனால், நரி கேட்பதாக இல்லை. பின் அறிஞராக உருமாறிய குள்ள நரி அமைச்சர் ஷாங் ஹுவாவை காணச் சென்றது. அமைச்சர் ஷாங் ஹுவா, மிடுக்கான தோற்றமும், பொலிவான நடையும் கொண்ட அறிஞராக உருமாறிய குள்ள நரியைக் கண்டு, அதற்கு நல்ல மரியாதை அளித்தார். இலக்கியம் பற்றி பேசிய அவர், அந்த அறிஞருடன் வடிவம், உள்ளடக்கம் என பல அம்சங்கள் பற்றி விவாதித்து, இதுவரை தான் அறியாத பலவற்றை தெரிந்துகொண்டார். அதற்கு பின் வரலாற்றையும், தத்துவயியலையும் பற்றி பேசுகையில் லாவ் சு மற்றும் ஷுவாங் சுவின் உண்மையான பொருள், பாடல் திரட்டு நூலின் மிக அற்புதமான மசங்கள், 10 முனிகள், மூன்று அறங்கள், கன்ஃபியூசியனிசத்தின் 8 வகை சிந்தனை வழிகள், 5 வகை சடங்குகள் என பல விடயங்கள் பற்றி விவாதத்தில் அமைச்சர் ஷாங் ஹுவாவுக்கு தோல்வியே. அசந்து போன ஷாங் ஹுவா நிச்சயம் இப்படியான ஒரு இளைய அறிஞர் இவ்வுலகில் இருக்க வாய்ப்பில்லை. இது ஒன்றேல் ஏதோ ஒரு ஆவியாக இருக்கவேண்டும் இல்லையேல் நரியாக இருக்கவேண்டும் என்று உணர்ந்தார். பின் அந்த அறிஞரை பாதுகாவலர்களை அழைத்து காவலில் வைத்தார் ஷாங் ஹுவா. இதைக் கண்ட அந்த இளம் அறிஞர் (குள்ள நரி) எதிர்க்கும் தொனியில்,
"ஐயா, திறமைக்கு மரியாதை தந்து மதிப்பு செய்யவேண்டும், நலவற்றை செய்து தன்னடக்கத்தை காட்டவேண்டும். மற்றவர் அறிஞராய் இருப்பது கண்டு ஏன் கோபம் கொள்ளவேண்டும்? இது மோ சுவின் கொள்கையான உலகளாவிய அன்பு என்பதற்கு பொருத்தமானதோ? " என்று கேட்டது. பின் தான் வெளியேற அனுமதிக்குமாறு கோரியபோது, பாதுகாவலர்கள், அனுமதிக்க மறுத்தனர். பின்னர் தொடர்ந்து, " உங்கள் வாயிலில் பாதுகாவல்ர்களையும், படையினரையும் நிறுத்தியுள்ளீர்கள். என்னை நீங்கள் சந்தேகிக்கின்றனர் என்பது தெளிவாகிவிட்டது. எதிர்காலத்தில் அனைவருமே வாய் பேசாமல் நாவடங்கி செல்வார்கள், அறிவுத் தேடலில் உள்ளோர் உமது வீட்டை கடந்து சென்று விடுவர். இது மிகவும் வருந்தத்தக்கது ஐயா" என்றது அந்த அறிஞராக மாறிய குள்ள நரி.


அனைத்தையும் கவனமாக கேட்ட ஷாங் ஹுவா எந்த பதிலும் சொல்லாமல், தனது பாதுகாவலரிடம் இந்த அறிஞரை கவனமாக கண்காணிக்கும் படி கூறினான். இதெல்லாம் நடந்த போது ஃபெங்ச்சாங் என்ற இடத்தின் நீதிபதியாக இருந்த லெய் ஹுவான் என்ற கொங்ச்சாங் ஷாங் ஹுவாவை சந்திக்க வந்தான். அறிவாளியும், கல்விமானுமான லெய் ஹுவானிடம் இந்த இளைஞர் அறிஞர் பற்றி கூறினார் ஷாங் ஹுவா.
நடந்ததை கேட்ட லெய் ஹுவான் "சந்தேகமிருப்பின், ஏன் ஒரு வேட்டை நாயை வைத்து பரிசோதிக்கக்கூடாது" என்றான். அவ்வாறே ஒரு வேட்டை நாயைக்கொண்டு வந்து இந்த அறிஞர் முன் நிறுத்தினர். எந்த மாற்றமும் இல்லை, உண்மையில் குள்ள நரியே என்றாலும், அறிஞர் உருவத்தில் எந்த மாற்றமும் இல்லை.
" நான் ஒரு திறமைசாலி. என்னை நீங்கள் ஒரு கொடிய விலங்கு போல் எண்ணி, நாயைக் கொண்டு சோதிக்கிறீர்கள். நிங்கள் இன்னும் 10 ஆயிரம் வித்தைகளை செய்து பார்க்கலாம் ஆனால் அவற்றால் எனக்கு எந்த துன்பமும் ஏற்படப்போவதில்லை என்றது அந்த குள்ள நரி.
இதைக் கேட்டதும் ஷாங் ஹுவாவுக்கு இன்னும் தெளிவானது, வந்திருப்பது மனிதன் அல்ல, நிச்சயம் ஒரு கொடிய விலங்குதான் என்று. ஆயிரமாண்டுகள் வாழும் இத்தகைய கொடிய விலங்குகளை ஆயிரமாண்டுகள் கடந்து வாழும் மரத்தின் கிளைகொண்டு மூட்டிய நெருப்பை காட்டினால், அவை உண்மை உருவத்தை வெளிப்படுத்தும் என்று கேள்விப்பட்டுள்ளேன் என்றார்.


இதற்கு லெய் ஹுவான் அத்தகைய மரத்தை எங்கே காண்பது என்று கேட்க. யான் நாட்டு அரசன் ஷாவ்வின் கல்லறையில் உள்ள ஒரு மரத்தூண் ஆயிரமாண்டுகள் கடந்தது என்று கூறுகின்றனர் என்றார் ஷாங் ஹுவா. பின் கல்லறைக்கு ஒரு ஆள் அனுப்பினான். அந்த ஆள் கல்லறைக்கு சென்றபோது, எதிரில் ஒரு சிறுவன் வந்தான். நீங்கள் இங்கே வரக் காரணம் என்று கேட்ட அந்த சிறுவனிடம், அமைச்சர் ஷாங் ஹுவாவை காண வந்த இளம் அறிஞரை பற்றி கூறி, மிகவும் மதிநுட்பம் நிறைந்த அந்த இளம் அறிஞர் நிச்சயம் ஒரு கொடிய விலங்குதான் என்று அமைச்சர் சந்தேகிப்பதாவும், அதை உறுதிப்படுத்த எரியூட்ட கல்லறையில் உள்ள மரத்தை எடுக்க தான் வந்ததையும் கூறினான், ஷாங் ஹுவா அனுப்பிய ஆள்.
"அந்த கிழட்டு நரி சரியான முட்டாள்" என்ற சிறுவன் " நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சென்று மாட்டிக்கொண்டது, இப்போது நானும் இதில் சிக்கிக்கொண்டேன், தப்பிக்க வழியில்லை" என்றான்.
பெருமூச்செழுப்பிய்படி காற்றில் மறைந்தான் சிறுவன். அமைச்சர் அனுப்பிய ஆள், கல்லறையில் இருந்த மரத்தூணை வெட்டியபோது, அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. பின் அந்த மரத்துண்டை அமைச்சரிடம் கொண்டு வந்தான் அந்த ஆள். மரத்துண்டு எரியூட்டப்பட்டு இளம் அறிஞர் முன் காட்டப்பட்டவுடன் குள்ள நரியின் உண்மை தோற்றம் வெளிப்பட்டது.
இந்த உருவங்களை ஒருவேளை சந்திக்காதிருந்தால், இன்னும் பல்லாயிரமாண்டுகள் யாராலும் பிடிபடாமலேயே இவை திருந்திருக்கும் என்று கூறிய அமைச்சர் ஷாங் ஹுவா" குள்ள நரியை கொதிகலனில் போட்டு வேகவைத்து அதை அழித்தாராம்.