ஒலிம்பிக் தீபம், ஒலிம்பிக் விளையாட்டை சேர்ந்தது. தீபத்தொடரோட்ட நடவடிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக உள்ளன என்று சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் மூத்த உறுப்பினர் Anita DeFrantz அம்மையார் கூறினார்.
உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 8ம் நாள், San Francisco நகரில் நடைபெற்ற தீப ஏந்துபவருக்கான பயிற்சி கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சிலர் இலண்டன், பாரிஸ் ஆகிய இரண்டு நகரங்களில் தீபத்தொட்டரோட்ட நடவடிக்கையை சீர்குலைத்தது குறித்து, அவர் கூறியதாவது:
நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஒலிம்பிக் தீபத்தின் உண்மையான முக்கியத்துவத்தை சிலர் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒலிம்பிக்கின் அருமையான கருத்தை உண்ர்ந்துகொள்ளவில்லை என்றார் அவர்.
|