
1860ல் இரண்டாவது அபினிப் போரின் போது தீய் வாய்ப்பட்ட இந்தப் பூங்கா, 1888ல் பேரரசி டவாகர் சி ஸியால் புதுப்பிக்கப்பட்டது.பேரரசி டவாகர் முகில் கலைத்தல் மாளிகை தான் தமது பிறந்த நாளைக் கொண்டாடுவது வழக்கம. அப்பொழுது எண்ணற்ற பரிவாரங்கள் பார்த்து நிற்க பேரரசன் அவரை வீழ்ந்து வணங்கியதாகக் கூறப்படுகிறது. 1905ல் ஒரு டச்சு ஓவியரால் வரையப்பட்ட சி ஸியின் உருவப்படம் ஒன்றும் அம்மாளிகையின் நடுவே இருக்கிறது.

யி ஹெ யுவன் கட்டிடக் கலையின் மிகச் சிறந்த பகுதியை நாம் இங்கேயே அனுபவிக்கலாம். 20 மீட்டர் உயரமான கல் தளத்திலே அமைந்த இவ் எண் கோண விதானம், 40 மீட்டர் உயர்ந்து நிற்கிறது.

நுழைவு கட்டனம்: சுற்றுலாக் காலம் : 40 யுவான், இதர காலம் : 20 யுவான் (மாணவர்களுக்கு:அரை கட்டனம்) பூங்கா திறக்கப்படும் நேரம் : சுற்றுலாக் காலம்: காலை 6:30 மணி முதல் மாலை 6 மணி வரை இதர காலம் : காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
|