• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-10 11:42:49    
2008 சிறப்பு இனிப்பு

cri
2008 சிறப்பு இனிப்பு

Guangdong மாநிலம் மற்றும் ஹாங்ஹாங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தை சேர்ந்த 2008 இளைஞர்கள் கனமான ஆல்மண்ட் கேக் ஒன்றை தயாரித்துள்ளனர். இது 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் அடையாளமாக 2008 பேரால் செய்யப்பட்டதால் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. 155.2 கிலோவுடைய அந்த கேக் Guangdong கிலுள்ள Zhongshan னில் தயாரிக்கப்பட்டது. அதன் குறுக்களவு 106.8 சென்டி மீட்டரும் உயரம் 23.8 சென்டிமிட்டரும் ஆகும். தென் சீனாவில் புகழ் பெற்றதும், மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்றான அல்மவுண்ட இனிப்பில் இது உலகளவில் கனமானதாக எண்ணப்படுகிறது. 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனித தீ பெய்சிங் வந்தடைந்த நாள் மற்றும் உலகளவில் தீப தொடரோட்ட நெறியின் ஆரம்ப விழா நடைபெற்ற மார்ச் 31 ஆம் நாள் இந்த கனமான அல்மவுண்ட் கேக் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது மேலும் சிறப்பூட்டியது.

பல் முளைக்கும் முதியவர்

குழந்தைகளுக்கு புதிதாக பல் முளைக்கும். ஏழு அல்லது எட்டு வயதில் பால் பல் விழுந்து மீண்டும் புதிய பல் முளைக்கும். வயது முதிர்ந்த பின்னர் பற்கள் அனைத்தும் விழத் தொடங்கும். அதற்கு பின்னர் பற்கள் முளைப்பதில்லை. இவையெல்லாம் இயல்பு தானே. இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? Hunan மாநில Hengyang கில் வாழ்கின்ற 97 வயதான ஒருவருக்கு 2 புதிய பற்கள் முளைத்திருப்பது மருத்துவ துறையில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பணி ஓய்வு பெற்றுள்ள Wu Dechen , இரண்டாண்டுகளுக்கு முன்னால் வலிப்பு நோயால் தாக்கப்பட்டு சக்கர நாற்காலியின் துணையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்போதே அவருக்கு பற்கள் கிடையாது. ஆனால் இப்போது 2 புதிய பற்கள் முளைத்துள்ளதோடு வெள்ளையான முடி மீண்டும் கறுப்பு நிறமாக முளைக்க தொடங்கியுள்ளன. Hunan மாநில மக்கள் மருத்துவமனை மருத்துவர் Zhang Chi, Wu வுடைய இந்த வளர்ச்சி அவர் உடல் நலத்தோடு இருக்கிறார் என்பதை காட்டுகிறதேயெழிய அவருக்கு இளமை திரும்புகிறது என்று எண்ணுவதற்கில்லை என குறிப்பிட்டுள்ளார். வலிப்பு நோய்வாய்ப்பட்டவர் உடல் நலத்தில் இவ்வளவு தேற முடியுமா என்று கேட்டால், 80 வயது வரை Wu மலை ஏறி வந்தார் என்றும் வலிப்பு நோய்க்கு பிறகு இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சில இனிப்பு வகைகள், பழங்கள் மற்றும் பால் தான் உட்கொள்கிறார் என்றும் அவர் மகள் தெரிவித்துள்ளார்.