• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-10 16:04:23    
விமானத் தயாரிப்பு கனவு (அ)

cri
தமிழன்பன்....... கலை இன்றைய நிகழ்ச்சியில் நாம் எதை பற்றி முக்கியமாக விளக்கி கூற இருக்கின்றோம்.

கலை........ தற்போது அதிகமான நேயர்கள் இந்த நிகழ்ச்சி/யில் பங்கு கொள்கிறார்கள். அவர்கள் மிகவும் சுறுசுறுப்போடு அதிக வினாக்களை எழுப்பியுள்ளனர்.

தமிழன்பன்.......அவர்கள் கேட்ட வினாக்களுக்கு விடையளிப்பதற்கு

சரியான தகவல் சேகரித்து பதிலளிக்க வேண்டும். அப்படிதானே.

கலை.........கண்டிப்பாக. இந்த முறை வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் சீனாவின் விமான தயாரிப்பு துறை பற்றியும் அதன் பயணியர் விமான சேவை பற்றியும் வினா எழுப்பியுள்ளார்.

தமிழன்பன்....... இன்றைய நிகழ்ச்சியில் நாம் விபரமாக இத்துறை பற்றி விவரிக்கலாம்.

கலை.........ஆமாம். சீனாவின் விமானம் தயாரிப்பு துறை பற்றி அறிமுகப்படுத்துவதற்கு முன் அத்துறையின் பின்னணி மற்றும் தற்போதைய உலகின் விமானம் தயாரிப்பு நிலைமை பற்றி கொஞ்சம் அறிமுகப்படுத்த வேண்டும்.

தமிழன்பன்....... தாராளமாக சொல்லுங்கள்.


 


கலை.........1903ம் ஆண்டு அமெரிக்காவின் ரைட் சகோதர்கள் மனித குலம் ஆகாயத்தில் பறக்கலாம் என்ற கனவை முதன்முதலாக நனவாக்கினர்.

தமிழன்பன்.......1910ம் ஆண்டு பிரான்ஸின் பிஃபோ, விமானம் நீரின் மேல் ஏறி இறங்க செய்து சாதனை படைத்து உலகில் முதலாவதாக நீர் மேல் பறக்கும் விமானத்தை தயாரித்தார்.

கலை.........அப்போது சீனா இராணுவ பிரபுக்களின் சக்திகளால் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. ஆனாலும் தங்களின் விமான தயாரிப்பு கனவை சீன மக்கள் கைவிட வில்லை.

தமிழன்பன்.......எத்தனை ஆண்டுகள் கழிந்த பின் சீனா தமது சுய சக்தியை சார்ந்திருந்து விமானம் தயாரித்தனர்?

கலை.........பிரான்ஸியர் விமானம் தயாரித்ததிலிருந்து 9 ஆண்டுகள் கடந்த பின் அதவாது 1919ம் ஆண்டின் ஆகஸ்ட் திங்கள் 9ம் நாள் சீனாவின் புஃசியான் மாநிலத்தின் மாவே கடல் கரையில் சீனரால் தயாரிக்கப்பட்ட விமானம் வானத்தில் பறக்க தொடங்கியது.

தமிழன்பன்.......அன்று மக்கள் பலர் கடல் கரையில் கூடி நின்றனர்.

கலை.........ஆமாம். படைவீரர்கள், அதிகாரிகள், போது மக்கள் ஆகியோர் கூட்டமாக காணப்பட்டனர்.

தமிழன்பன்.......மக்களின் கவனம் கடல் நீர்பரப்பில் மிதந்த மரத் துண்டுகளிலான விமானத்தில் குவிந்திருந்தது.

கலை.........அப்படி மரத் துண்டுகளால் தயாரிக்கப்பட்ட விமானம் உந்து சக்தியுடன் நீர் பரப்பில் விரைவாக ஓடி பிறகு கடல் மேல் பறந்தது. உயர்வாக, வேகமாக நிதானமில்லாததாக இருந்த போதிலும் அது சீன வரலாற்றில் முதல்முதலாக சுயசார்ப்புடன் தயாரித்து பறந்த விமானமாக திகழ்ந்தது.

தமிழன்பன்......அப்போது முதல் பல்வேறு நாடுகள் விமான தயாரிப்பில் கவனம் செலுத்தின.

கலை.........குறிப்பாக முதலாவது உலக போர் மூண்ட போது விமானத் தயாரிப்பில் மேம்பாடு காணப்பட்டது.

தமிழன்பன்......மேலை நாடுகளால் ஏற்பட்ட இராணுவ பாதிப்புகளால் சீனப் பிரமுகர்கள் விமானம் இராணுவத் துறையில் பயன்படுத்தப்படும் முக்கியத்துவதை அறிந்து கொண்டனர்.

கலை.........தற்சார்ப்புடன் விமானம் தயாரிக்க வேண்டும் என்று அவர்கள் அரசிடம் ஆலோசனையை முன்வைத்தனர்.

தமிழன்பன்......அப்போது சீனா சுயசார்ப்புடன் விமானம் தயாரிப்பதில் யாரை சார்ந்திருந்தது?

கலை.........அந்நேரம் முக்கியமாக வெளிநாடுகளில் கல்வி முடித்து பட்டம் பெற்று நாடு திரும்பிய மாணவர்கள் விமானத் தயாரிப்புத் துறையில் மாபெரும் சக்தியாக கருதப்பட்டனர்.



தமிழன்பன்......சில உதாரணங்களை எடுத்துக் கூறலாமா?

கலை.........எடுத்துக்காட்டாக, அப்போது உலகில் முதலாவது நிலையாக கருதப்பட்ட விமான அறிவியல் திறமைசாலிகளான ba yu zao,wang zhu முதலியோர் 1916ம் ஆண்டு ஜுன் திங்கள் தலைசிறந்த மதிப்பெண்களுடன் அமெரிக்காவின் Massachusetts பொறியியல் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை பட்டம் பெற்றனர்.

தமிழன்பன்...... அவர்கள் உடனடியாக நாடு திரும்பினார்களா?

கலை.........இல்லை. விமான தயாரிப்பிலான அனுபவங்களை சேகரிக்கும் வகையில் அவர்கள் அமெரிக்காவின் பல்வேறு விமான தயாரிப்பு ஆலைகளில் பணி புரிந்தனர். 1917ம் ஆண்டு குளிர் காலத்தில் அவர்கள் நாடு திரும்பினர்.

தமிழன்பன்......நாடு திரும்பியதுடன் விமான தயாரிப்புத் துறையில் ஈடுபட்டார்களா?

கலை.........ஆமாம். புஃசியான் மாநிலத்தின் மா வே கப்பல் கட்டும் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களை அவர்கள் பயன்படுத்தி தலைசிறந்த தொழில் நுட்ப தொழிலாளர்களுக்கு விமான தயாரிப்புத் தொழில் நுட்பப் பயற்சி அளித்தனர்.

தமிழன்பன்......அவர்களின் முயற்சியுடன் எளிதான வசதிகளோடு 1919ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் ஏ-1 என்ற இரண்டு மித வைக்களையும் இரண்டு இறக்கைகளையும் கொண்ட விமானம் தயாரிக்கப்பட்டது.



கலை.........இந்த விமானம் நீர் மேல் ஓடி மேலே பறக்கும் விமானமாகும். அதன் திறனும் அப்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்ட விமானங்களின் திறனும் சமமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழன்பன்......அப்போதைய சீன அரசு அதனை வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கியது.