வன்முறை குற்றச் செயல்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் மற்றும் தாய்நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தையும் தலாய் லாமா நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு நிபந்தனையை உருவாக்க வேண்டும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஐக்கிய முன்னணி வேலை துறையின் துணை அமைச்சர் SITA நேற்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார். பேச்சுவார்த்தை பற்றிய விவாதத்தில் முன்னேற்றம் காணப்படவில்லை. இதற்கான காரணம் தலாய் லாமா தான். தலாய் லாமா தரப்பு பேச்சுவார்த்தை பற்றிய நல்லெண்ணத்தை வெளிர்காட்டவில்லை. திபெத் சுதந்திரம் என்ற நிலைப்பாட்டையும் தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளையும் கைவிடவுமில்லை என்று SITA கூறினார்.
|