அண்மையில் திபெத் லாசாவில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து சர்வதேச புலனாய்வையும், தனிப் புலனாய்வையும் நடத்த வேண்டும் என சிலர் கோரியுள்ளனர். இது பற்றி சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ச்சியாங் யூ அம்மையார் பேசுகையில், 10க்கும் மேற்பட்ட ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளிலுள்ள சீனத் தூதரகங்கள் மீதான கடுமையான வன்முறை தாக்குதல் நிகழ்ச்சிகள் பற்றி தொடர்புடைய தரப்புகளும் நாடுகளும் முதலில் புலனாய்வு செய்து, அவற்றில் திரைக்குப்பின்னாலுள்ள நபர்களைக் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று கூறினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இவற்றைச் சமாளிக்க இந்த நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் சீன அரசின் நடவடிக்கைகளையும் மதிப்பிடுகையில் சர்வதேச ஊடகங்கள் வேறுபட்ட வரையறைகளை மேற்கொண்டன என்று ச்சியாங் யூ அம்மையார் சுட்டிக்காட்டினார். சீனத் தூதரகங்கள் தாக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் புலனாய்வு செய்த பிறகு, பல உண்மைகள் வெளி வரக் கூடும் என்று அவர் கூறினார்.
|