• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-10 19:52:51    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீதான நம்பிக்கை

cri

16வது பன்னாட்டு தேசிய ஒலிம்பிக் குழுக்கள் சங்கத்தின் பொதுப்பேரவையின் கூட்டம், நேற்று பெய்சிங்கில் நிறைவுற்றது. செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்தப் பணிகளை, இதில் கலந்து கொண்ட பல பிரதிநிதிகள் முழுமையாக உறுதிப்படுத்தியதோடு, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஏற்று நடத்த விண்ணப்பித்த போது அளித்த வாக்குறுதிகளை சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது என்று கருத்து கூறியுள்ளனர்.
பன்னாட்டு தேசிய ஒலிம்பிக் குழுக்கள் சங்கத்தில், 205 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் குழுகள் இடம்பெறுகின்றன. இது சர்வதேச அளவில் ஒரு முக்கிய விளையாட்டு அமைப்பு ஆகும். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதிகள் மாநாடு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இவ்வாண்டு ஏப்ரல் 7ம் நாள் முதல் 9ம் நாள் வரை, 16வது பன்னாட்டு தேசிய ஒலிம்பிக் குழுக்கள் சங்கத்தின் பொதுப்பேரவை கூட்டம் பெய்சிங்கில் நடைபெற்றது. பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பணி அறிக்கையை பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கேட்டறிந்தனர். இம்மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, பன்னாட்டு தேசிய ஒலிம்பிக் குழுக்கள் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் செயற் குழுவுடன் இன்று இணைப்புக் கூட்டத்தை நடத்தின. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினையாக அமைந்தது.

பன்னாட்டு தேசிய ஒலிம்பிக் குழுக்கள் சங்கத்தின் தலைவர் Mario Vazquez Rana சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான பல்வேறு ஆயத்த பணிகள் மிகவும் சிறப்பாகவுள்ளன. ஒரு சிறப்பான ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தவென முழு சீனாவும் முயற்சி செய்கின்றது என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

இது வரை, நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றோம். இவ்வாண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, வரலாற்றில் மிகச் சிறப்பான ஒரு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாக மாற வேண்டும் என்று விரும்புகின்றோம். தற்போது, முயற்சி மூலம், நாங்கள் இவ்விலக்கை மென்மேலும் நெடுங்கி வருகின்றோம் என்றார் அவர்.
இச்சங்கத்தின் 205 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் குழுக்களின் பிரதிநிதிகள் அனைவரும், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு முழுவதுமாக ஆதரவு தெரிவித்தனர். பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் ஆயத்தப் பணிக்கான அங்கீகாரம், பிரதிநிதிகளின் நம்பிக்கைக்கு முக்கிய காரணமாகும் என்று Rana கூறினார்.

பிரான்ஸின் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணைத் தலைவர் Bernard Lapasset பேசுகையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் திடல்கள் மற்றும் அரங்குகளுக்கான கட்டுமானத்துக்கு பிரான்ஸ் ஒலிம்பிக் அமைப்புக் குழு மிகவும் மனநிறைவு தெரிவித்தது என்றார். அவர் கூறியதாவது:

பெய்சிங் மாநகர அரசின் ஆயத்த பணி மிகச் சிறப்பானது. நான் பெய்சிங்கிலான சில இடங்களை பார்வையிட்டேன். விளையாட்டு திடல்களும் அரங்குகளும் மிகவும் பெரியவை. இத்திடல்களும் அரங்குகளும், விளையாட்டு வீரர்களுக்கு மனநிறைவு தரும். அடுத்த சில திங்களில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மாபெரும் சிறப்பான நடவடிக்கையாக மாறுவது உறுதி என்று நம்புவதாக அவர் கூறினார்.

2016ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஜப்பானிய டோக்கியோவின் விண்ணப்பக் குழுவின் தலைவர் Ichiro Komo செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, ஒலிம்பிக் பற்றிய ஒரு தொகுதி வாக்குறுதிகளை சீனா நிறைவேற்றியுள்ளதை உறுதிப்படுத்தினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அவர் நம்பிக்கையை தெரிவித்ததோடு, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான விண்ண்ப்பம் பற்றிய சீனாவின் அனுபவங்களை பெற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், சர்வேதச ஒலிம்பிக் அமைப்புக் குழு, விளையாட்டு போட்டியை நடத்தும் நகரங்களின் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை விண்ணப்பித்த போது, பசுமையான ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சீன அரசு வாக்குறுதி அளித்தது. இது பற்றி, சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் Jacques Rogge, பன்னாட்டு தேசிய ஒலிம்பிக் குழுக்கள் சங்கத்தின் பொதுப் பேரவையில் கலந்து கொள்கையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஆயத்தம் செய்யும் போக்கில், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சீன அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, சுற்றுச்சூழல் தரத்தை உத்தரவாதம் செய்யலாம் என்று Rogge தெரிவித்தார். அவர் கூறியதாவது:

கடந்த 8 ஆண்டுகளில், சீனாவின் தொழில் துறை விரைவாக வளர்ந்து வருவதால், காற்று மாசுபடுத்தல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சீன அரசு பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு நாங்கள் பாராட்டு தெரிவிக்கிறோம். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்காக மட்டுமின்றி, இனிமேல் சுற்றுச்சூழல் பிரச்சினையை தீர்க்கவும் இது துணை புரியும் என்றார் அவர்.