கடந்த சில ஆண்டுகளாக, திபெத்தின் விவசாயிகளும் ஆயர்களும் பயிரிடுதல் மற்றும் வளர்ப்புத் தொழில் கட்டமைப்பை ஆக்கப்பூர்வமாக சரிப்படுத்துதல், குடும்ப தங்கு விடுதிகளை, வெளியூருக்குச் சென்று பணி புரிதல், கார் போக்குவரத்து முதலியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக, அவர்களின் வருமானம் தொடர்ந்து உயர்ந்ததுடன், வாழ்க்கை நிலையும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
2006ம் ஆண்டு முதல் திபெத்தில், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தும் திட்டப்பணி துவங்கியது. இது வரை, அரசு இதற்கு 530கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு இலட்சத்து 10ஆயிரம் விவசாயிகளும் ஆயர்களும் பாதுகாப்பான மற்றும் நல்ல புதிய வீடுகளைப் பெற்று, வாழ்கின்றனர்.
திபெத்தின் பொருளாதார வளர்ச்சிப் போக்கில், பொது மக்கள் அதிக நலன்களை பெற்றனர். நடுவண் அரசு திபெத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2006ம் ஆண்டு திபெத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும் 40 முன்னுரிமைக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. மேலும், 2007ம் ஆண்டு 7700கோடி யுவான் தொகை அதிகரிக்கப்பட்டு, இப்பிரதேத்திலான 180 திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் சியாங்பா புன்சோக் கூறினார்.
|