• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 10:30:15    
சீனாவின் சிபோ இனம்

cri

சிபோ இன மக்களின் மூதாதையார், hulunbeier புல்வெளி மற்றும் nen jiang ஆற்றுப்பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். தற்போது, சிபோ இன மக்கள், முக்கியமாக, சிங்கியாங் chabuchaer சிபோ தன்னாட்சி மாவட்டத்திலும், huocheng, gongliu முதலிய மாவட்டங்களிலும் வசிக்கின்றனர். அதன் மக்கள் தொகை, 1 இலட்சத்து 73 ஆயிரமாகும்.

சிபோ இன மொழி, Altic மொழி குடும்பத்தைச் சேர்ந்தது. இது, 1947ம் ஆண்டில், மன் இன மொழியின் அடிப்படையில் வளர்ந்தது. சிங்கியாங்கிலான சிபோ இனம், இதுவரை, சொந்த மொழியை தான் பயன்படுத்துகின்றனர். சிலர், ஹன், உயிகூர் மற்றும் ஹசாக் மொழிகளையும் பயன்படுத்துகின்றனர். வடகிழக்கு சீனாவில் வசிக்கின்ற சிபோ இன மக்களின் மொழி, ஆடை, உணவு, வசிப்பிடம் முதலியவை, உள்ளூர் ஹய் மற்றும் மன் இன மக்களுடன் ஒப்பிட்டும் போது, பொதுவாக ஒத்ததாக உள்ளது.

சிபோ இனத்தின் ஆண் குழந்தைகள், 5 அல்லது 6 வயதிலேயே, குதிரை ஏற்றத்தையும் அம்பு எய்தலையும் கற்றுக்கொள்ள தொடங்குகின்றனர். அதனால், அம்பு இனம் என்ற புகழை, சிபோ இனம் கொண்டுள்ளது. அவர்கள் பாட்டிலும் நடனத்திலும் சிறந்தவர்களாவர். dongbuer என்பது, சிபோ இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த இசை கருவியாகும்.

முன்பு, சிபோ இன மக்கள் தலைமுறை தலைமுறையாக, வேட்டையாடலிலும் மீன்பிடிப்பு துறையிலும் ஈடுபட்டனர். chaer zhaer உள்ளிட்ட பல இடங்களில் வசிப்பவர்கள், முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். கால்நடை வளர்ப்பும் வளர்ந்துள்ளது.

முன்பு சிபோ இன மக்கள், பல கடவுள்களை வழிபட்டனர். சிலர் லாமா மதத்தில் நம்பிக்கை கொண்டவராவர். இவர்கள் பொதுவாக, மூதாதையார்களை வழிபடுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

சீனாவின் மன் இன மக்களை போலவே, சிபோ இன மக்கள், நாய் இறைச்சியைச் சாப்பிடவோ. நாய் தோலால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியவோ மாட்டார்கள்.

சிபோ இனத்தின் பல பாரம்பரிய விழாக்கள், ஹன் இனத்தின் விழாக்களை போலவே இருக்கின்றன. வசந்த விழா, இறந்தோரி நினைவு விழா, பெரிய படகு போட்டி விழா ஆகியவை அடங்குகின்றன.