• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 11:57:11    
வாங்இன மக்கள் மற்றும் அவர்களது தியன் ச்சின்

cri
சீனாவின் தென்மேற்குப் பகுதியின் குவாங்சி சுவாங்இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் சோங் சோ நகரத்தின் long zhouமாவட்டத்தில், பாரம்பரிய கலையான தியன் ச்சின் கலை பரவலாகியுள்ளது. சுவாங்இனத்தின்தியன் ச்சின்இசைக்கருவியைத் தயாரிக்கும்qin huabeiக்கு இவ்வாண்டு வயது 43. அவர், இக்கலையைப் பரவலாக்கி வெளிக்கொணர்வதற்குத் தமது வாழ் மாளை அர்ப்பணித்தார்.

நேயர்களே, தற்போது, தியன் ச்சின் எனும் இசைக் கருவியுடன் பாடிய 《சாங் தியன் யாவ்》பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்பாடலை qin huabei மற்றும் அவரது மகள் பாடுகின்றனர். தியன் ச்சின் என்பது சுவாங்இனத்தின் பண்டைய இசைக்கருவியாகும்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியின் குவாங்சி சுவாங்இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் சோங் சோ நகரத்தின்long zhouமாவட்டத்தில், qin huabei வாழ்ந்து வருகின்றனார். அவரது பாட்டனார், தியன் ச்சின் கலைஞர்களில் ஒருவர் ஆவார். குழந்தைப்பருவம் முதல்,அவர் தியன் ச்சின்இல் ஆர்வம் கொண்டார். அவர் கூறியதாவது

குழந்தை காலத்தில் எனது பாட்டனார், தியன் ச்சின்யைத் தயாரித்த போது, நான் அவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். பிறகு, நான் இதை விரும்பினேன். எனது பாட்டனார், இக்கருவியைத் தயாரிப்பது மட்டுமல்ல, நன்றாக வாசிக்கவும் கூடியவர்.

கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளி்ன் துவக்கத்தில் அவர் உள்ளூர் கலைக்குழுவில் சேர்ந்தார். ஓய்வு நேரத்தில், தியன் ச்சின் தயாரிப்பை அவர் துவக்கியுள்ளார். ஆனால், இந்த பண்டைய கலை, போதிய அளவு கவனமும் பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை. எனவே, qin huabeiயின் இந்த பணி, ஏற்க்குறைய தேக்க நிலையில் இருந்திருந்தது.

21வது நூற்றாண்டில், தியன் ச்சின்கலையைக் காப்பாற்றும் வகையில், தியன் ச்சின் பண்பாட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளூர் அரசு தொடங்கியது. அதே வேளையில், சராசரிபோக 21 வயது கொண்ட 15 long zhou பெண்கள் இடம்பெறும்தியன் ச்சின் இசைக்குழு, உருவாகியுள்ளது. நிகழ்ச்சிகளுக்குqin huabei, தியன் ச்சின்யைத் தயாரிக்க வேண்டும் என்று உள்ளூர் அரசின் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்தனர். இத்தகவலைக் கேட்டு, qin huabei மிக மகிழ்ச்சி அடைந்தார்.

2003ம் ஆண்டின் நவம்பர் திங்கள், 5வது nan ning சர்வதேச நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சியில், சுவாங்தேசிய இன கறுப்பு நிற ஆடைகளை அணிந்த 15 long zhou பெண்கள், qin huabei தயாரித்த , தியன் ச்சின்யை மீட்டி, அருமையாகப் பாடிளர். பண்டைய தியன் ச்சின் இசை, தெளிவான மணியோசை கணீர் என்ற பாட்டொலி ஆகியவற்றால், அனைத்து ரசிகர்களும் கவரப்பட்டனர்.

இதற்குப் பிறகு, 15 long zhou பெண்கள், qin huabei தயாரித்த , தியன் ச்சின்யைக் கொண்டு,long zhou, guang xi மற்றும் தாய்நாட்டிற்கு வெளியே சென்றனர். 2003ம் ஆண்டு முதல், தியன் ச்சின் பெண்கள் பாடல் குழு, ஆஸ்திரியா, ஜெர்மனி முதலிய நாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சி அரங்கேற்றியுள்ளது. qin huabei தயாரித்த 1300க்கு மேற்பட்ட தியன் ச்சின்கள், அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டன.

தியன் ச்சின், பொது மக்களிடமிருந்து வளர்வதால், அது எளிதான தயாரிப்பு கைவினை கொண்டது. இசை மண்டலம் குறுகிறது. வாசிப்பதற்கு வசதியாயில்லை. எனவே, கடந்த சில ஆண்டுகளாக, இந்தப் பண்டைய இசைக் கருவியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி, qin huabei அதிகமாக எண்ணி வருகின்றார்.

முயற்சிகள் மற்றும் சோதனைகளுக்குப் பின், கடைசியாக, நீண்டகாலம், உழைக்கவல்ல அருமையான ஒலி,பரந்த இசை மண்டலம், எளிதில் வாசிப்பது,நவீன இசையை வாசிக்கவல்ல புதிய தியன் ச்சின் ஐqin huabei தயாரித்துள்ளார்.

தற்போது, உள்ளூர் தொடர்புடைய வாசியங்கள், தியன் ச்சின் பண்பாட்டுப் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. அவை, தியன் ச்சின் பெண்கள் பாடல் வாசிப்புக் குழுவை அமைத்து, தியன் ச்சின்யின் புதிய இசையை இயற்றுகின்றன. துவக்க பள்ளிகளிலும் இடை நிலை பள்ளிகளிலும் அவை இளம் மாணவர்களை தியன் ச்சின்ஐ கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து, இந்த சிறுபான்மை தேசிய இனங்களின் மரபுச் செல்வத்தை வகுப்புகளில் இல் உட்புகுத்தியுள்ளன. தற்போது, தியன் ச்சின், long zhou மாவட்டத்தில் பிரபலமான விரும்பத்தக்க இசைக்கருவியாக மாறியுள்ளது. qin huabeiயின் 20 வயது மகள், தமது அப்பாவின் பணியைக் கையேற்று, தியன் ச்சின் பெண்கள் பாடல் வாசிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினராக மாறியுள்ளாள். இந்த மாற்றங்களைக் கண்டு, qin huabei மகிழ்ச்சி அடைகின்றார். அவர் கூறியதாவது

வகுப்பு நிறைவடைந்த பின், பல மாணவர்கள், இங்கு வந்து, தியன் ச்சின் வாசிக்க கற்றுக்கொள்கின்றனர். குறிப்பாக, பெண்கள், இதை ஏற்றுக்கொள்கின்றனர்.

2007ம் ஆண்டின் ஜூன் திங்கள், சீனாவின் முதலாவது நாட்டுப்புற பண்பாட்டு கலைகளின் தலைசிறந்த வாரிசுகளை நியமிக்கும் மாநாடு, மக்கள் மகாமண்டபத்தில் நடைபெற்றது. சீனாவின் தலைசிறந்த வாரிசு என்ற விருதை qin huabei பெற்றிருக்கின்றார். long zhou மாவட்டத்தில், தியன் ச்சின்னைச் சிறப்புக் காட்சியாக மாற்றும் வகையில், எதிர்காலத்தில், தியன் ச்சின் தயாரிக்கும் வேலைக்களரி ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.