மொரோக்கோ நேயர் Idris Buwadina சீன வானொலி நிலையத்தின் அரபு மொழி இணையத்தளத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினார். சீனா, நீண்டகால வரலாறும் பண்பாடும் உடைய நாடாகும். இந்த ஒலிம்பிக் போட்டிகள், சீனாவுக்குச் சிறப்பான முக்கியத்துவம் உடையன. தற்போது உலகம் முழுவதும் பெய்ஜிங் மீது, கவனம் வைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டி தடைஇல்லாமல் துவங்குவதை, நாங்களும் ஆவலாக எதிர்பார்க்கிறோம். ஒலிம்பிக் போட்டிகள் என்றால் முழு உலகத்தின் பிரமாண்டமான போட்டிகளாகும். ஒலிம்பிக் போட்டிகளைச் சீர்குலைப்பது, முழு உலகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு என்ற இணையாகும். சீனாவை விரும்புகின்ற அனைவரின் எதிரியாக இருப்பதாகவும் அது பொருள்படுகின்றது. சீன அரசு மற்றும் உள்ளூர் அரசின் கூட்டு முயற்சியுடன், கலவரம் நிகழ்ந்த லாசா நகரம் அமைதிக்குத் திரும்பியுள்ளது என்பது, மகிழத்தக்கது என்று அவர் மின்னஞ்சலில் கூறினார்.
எங்களது நாடும் மத நம்பிக்கை உடைய நாடாகும், எங்களது மத நம்பிக்கை புனிதமாக இருக்கிறது. சமூகத்தின் நல்லிணக்கம், நாட்டின் நிதானம், உலகத்தின் அமைதி முதலியவற்றுக்கு, நமது கூட்டு முயற்சி தேவையாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
|