நீர் குதிப்பு துறையிலான இளவரசி கோ ஜிங் ஜிங்
cri
சீன நீர் குதிப்பு அணியின் தலைமை விளையாட்டு வீராங்கனையான கோ ஜிங் ஜிங், அனைத்து செய்தி ஊடகங்களும் பேட்டி காண விரும்பும் விளையாட்டு வீராங்கனையாக திகழ்கிறார். விளையாட்டு வீரர்கள் அனைவரையும் பொறுத்த வரை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது, சொந்த முயற்சியால் மட்டுமே நிறைவேற்றக் கூடிய கனவு அல்ல. இது, சந்திக்கப்படக் கூடிய வாய்ப்பாகும். கோ ஜிங் ஜிங்கைப் பொறுத்த வரை, அதிர்ஷ்டவசமாக 3 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டமை, அவர் படிப்படியாக பக்குவமடைந்த போக்காகும். 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் அவர் குதிக்கும் பாணி அழகாக இருக்கக் கூடும். விளையாட விரும்பும் இளம் பெண்கள் நலமான அழகைக் கொண்டவர்கள் உள்ளபடியே சொல்லும் இளம் பெண்ணாக கோ ஜிங் ஜிங் விளங்குகிறார். வேடம்
போட விரும்பாத அவர், தனது கருத்தை வெளிப்படுத்தும் போது மனம் திறந்து பேசுகிறார். உடல் நலம் பற்றிக் குறிப்பிடுக்கையில், பெரும்பாலான விளையாட்டு வீரர்களைப் போல், தானும் காயமடைந்ததாக கூறினார். ஆனால், பொதுவாக கூறினால், அன்றாட வாழ்க்கை ஒழுங்கான முறையில் நடத்துவதாலும், உரிய அளவிலான உடற்பயிற்சி செய்வதாலும், நல்ல உடல் நலத்துடன் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இளம் பெண்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கோ ஜிங் ஜிங் முன்மொழிந்தார். தமக்குப் பிடித்த எந்த வகை உடற்பயிற்சியையும் அவர்கள் செய்யலாம். உடற்பயிற்சி செய்வது வழக்கமாக மாறினால், அவர்களது மன நிலையும் வாழ்க்கை நிலையும் பெருமளவில் மேம்படுத்தப்படும். உடற்பயிற்சி வழக்கமாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் ஒரு பகுதியாக இது கருதப்பட வேண்டும் என்று அவர் கூறினார். பெரும்பாலான இளம் பெண்கள் மீது தாம் பொறாமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். ஏனென்றால், அன்றாட உடற்பயிற்சியை அவர்கள் சுயவிருப்பத்துடன் தெரிவு செய்யலாம்.
பயிற்சியை அனுபவிப்பது என்பது, ஆக்கப்பூர்வமான மனநிலையுடன் வாழ்க்கையை எதிர்நோக்குவதாகும் கோ ஜிங் ஜிங்கின் சீரான மனோ நிலை, செய்தி ஊடகங்களால் ஒரு மனதாகப் பாராட்டப்படுகிறது. விளையாட்டுப் போட்டியில் காட்டிய அமைதியைத் தவிர, அன்றாட வாழ்க்கையில் பிரச்சினையைச் சந்திக்கும் போது, சுயவிருப்பப்படி செயல்பட்டு மற்றவருக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்ற மனநிலையை அவர் கொண்டிருக்கிறார். வெளிப்புறத் தொல்லைகள் போகட்டும். மயக்கமின்றி, மன உறுதியையும் தெளிவான இலக்கையும் கொள்வது போதுமானது என்று அவர் உறுதியாக நம்புகிறார். "2004ஆம் ஆண்டுக்கு முன், அதாவது மேலும் இளமையாக இருந்த போது, பயிற்சியாளரின் கட்டளைக்கிணங்க பயிற்சி செய்ததால், அப்போதைய பயிற்சி மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கவில்லை. ஆனால் படிப்படியாக பக்குவமடைந்து,
ஏன் பயிற்சி செய்ய வேண்டும் என தெரிந்து கொண்ட பின், முன்முயற்சியுடன் மாறியுள்ளேன். இறுதியில் நீர் குதிப்பை ஆழமாக விரும்புகின்றேன்" என்றார் கோ ஜிங் ஜிங். பயிற்சியை மகிழ்ச்சியுடன் அனுபவித்து, ஆக்கப்பூர்வமான மனநிலையுடன் பயிற்சியைக் கருத்தில் கொள்வது, பயிற்சிக்குத் துணை புரியும் என்றும் அவர் கூறினார். சிகரத்தில் இருப்பது போன்ற உணர்வை அனுபவிக்க வேண்டுமானால், முழுமனதுடன் ஈடுபட வேண்டும் விளையாட்டு வீரர்கள் எளிமையானவர்கள். அவர்களுடன் பழகும் போது, எளிமையான இந்த உலகில் அரிய எழுச்சிகள் பல பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன என்பது புரியும். எடுத்தக்காட்டாக, நம்பிக்கை, எளிமை, முழுமனதுடன் ஈடுபடுதல். இவற்றின் காரணமாக, விளையாட்டுப் போட்டி மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
கோ ஜிங் ஜிங், வெளித்தோற்றத்திலிருந்து பார்த்தால் பாராமுக மனப்பான்மையுடன் இருந்து, உளத்தில் உற்சாகம் நிறைந்த விளையாட்டு வீராங்கனையாக திகழ்கிறார். தனது உற்சாகத்தை அவர் முழுமையாக பந்தயத்தில் வெளிக்கொணர்ந்துள்ளார். 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கும் மேடையில் நின்ற போது, கோ ஜிங் ஜிங்கைப் பொறுத்த வரை, வெற்றிச் சிகரத்தில் இருந்த தருணமாகும். தற்போது, தன்னைத் தானே மிஞ்சுவது தனது கனவாகும் என்று அவர் கூறினார். 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் நல்ல சாதனையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
|
|