பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான பாரிஸ்
cri
பிரான்ஸின் தலைநகரமான பாரிஸ், ஐரோப்பாவில் மிகப்பெரிய மற்றும் உலகில் மிகப்பரபரப்பான நகரங்களில் ஒன்றாகும். இது, பிரான்ஸின் வட பகுதியிலும் Seineஇன் மேற்கு கரையிலும் அமைந்துள்ளது. அதன் மக்கள் தொகை 21 இலட்சத்து 50 ஆயிரம் ஆகும். 1924ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியைப் பாரிஸ் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அரசியல்மயப்படுத்துவதற்கு, துருக்கியின் விளையாட்டு விவகாரத்துக்கு பொறுப்பான அதிகாரி Murat Baseskioglu எதிர்ப்பு தெரிவித்தார். துருக்கி தலைநகர் Ankaraவில் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது— ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பண்பாடு மற்றும் விளையாடு தொடர்பான நடவடிக்கையாகும். இக்கருத்து, உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் பண்பாட்டு துறைகளில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை விவாதிக்க வேண்டுமே தவிர அரசியல் துறையில் அல்ல ஒலிம்பிக் எழுச்சியை வெளிக்கொணர்வதற்கும் பேணிகாப்பதற்கும் இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார் அவர். ஆகஸ்டு திங்களில் நடைபெற விருக்கும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மனநிறைவு தெரிவித்தது. அத்துடன், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாக இருக்கும் என்றும் இது நம்பிக்கை
தெரிவித்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Rogge 5ம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்குப் பொறுப்பான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒருங்கிணைப்பு ஆணையத்தின் தலைவர் Verbruggen அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்டார். 120க்கு மேலான நாட்கள் கழிந்து, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்கியுள்ள நிலையில், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு மேற்கொண்ட அனைத்து ஆயத்தப் பணிகளுக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மனநிறைவு தெரிவித்தது என்று Rogge கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை புறக்கணிக்க சிலர் முயல்வதைச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எதிர்த்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார். பெய்சிங்கின் காற்று தரம், வீரர்களின் உடல் நலத்திற்கு கேடாக இருக்க முடியாது. சிங்கப்பூரின் நடுத்தரப் பள்ளி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போது, Rogge இவ்வாறு வலியுறுத்தினார்.
|
|