• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 14:02:15    
ஜெர்மன் நேயர் Helmut Mattயின் கருத்து

cri
ஜெர்மன் நேயர் Helmut Matt மின்னஞ்சலில் கூறியதாவது:இவ்வன்முறை சம்பவங்கள், நடைபெறவிருக்கும் பெய்ஜிங் ஒலிம்பிக்கை எதிர்க்கும் உள் நோக்கத்தைக் கொண்டவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையாக இருப்பதை, நான் துவக்கத்தில் கருதியுள்ளேன். உண்மைக்குப் புறமான பல்வேறு செய்திகள் உலகளவில் வேகமாக பரப்பப்படுவதிலிருந்து, இச்சம்பவங்களை உண்டாக்கியவர்கள் குறிப்பிடத்தக்க திட்டமிட்டுள்ளதை பார்க்கலாம். ஜெர்மனி மற்றும் உலகின் வேறு பிரதேசங்களிலுள்ள சிலர், சீனாவை எதிர்த்து, கூறப்படும் சுதந்திரமான திபெத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், சுதந்திர திபெத், எந்த வடிவமாக இருக்கிறது என்பது, யாருக்கும் தெரியாது. திபெத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த சம்பவங்களில், நல்லவை என எதுவும் பார்க்கப்பட முடியாது. பல சீனர்கள் இந்நிகழ்ச்சிகளில் காயமடைந்து உயிரிழந்தனர். இது, உலகளவில் பின்பற்றவர்களின் கவனத்தை ஈர்க்காது. சீனாவின் நடுவன் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், 5 பெண்கள் தீயால் உயிரிழந்ததைப் பார்த்தேன். மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சீனாவின் திபெத் மக்கள், தன்னாட்சி உரிமைகளைப் பெற்றுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டோர், ஜெர்மனியில் மிகவும் குறைவு. சீன வானொலியின் இணைய தளத்தில், 2006 திபெத் பண்பாட்டு வாரம் என்ற நிகழ்ச்சியுடன் தொடர்புடைய உள்ளடக்கம் இடம்பெறுவது, நன்றாக இருக்கிறது. அதனால், மக்கள், இந்த அழகான நிகழ்ச்சிகளை மீளாய்வு செய்ய முடியும். திபெத்தை, சீனாவிலிருந்து பிரிக்கும் பிரிவினைவாதிகளின் முயற்சி, சீனா மற்றும் திபெத்தில் வாழ்கின்ற மக்களால் இறுதியில் தோற்கடிக்கப்படுவது உறுதி என்று நம்புகின்றேன். சீன அரசு நிலைமையை வெகுவிரைவில் கட்டுப்படுத்தி, மக்கள் உயிரிழப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஜெர்மனி செய்தி ஊடகங்கள் செய்திகளின் திசையைத் திருத்த வேண்டும் என்றும், விருப்பம் தெரிவித்தேன். இவ்வன்முறை சம்பவங்களைப் பயன்படுத்தி, பெய்ஜிங் ஒலிம்பிக்கை எதிர்க்கும் நடவடிக்கையை கண்டிக்கின்றேன் என்றார் அவர்.