பிரேசில் நேயர் Rubens Pedroso யின் கருத்து
cri
சீன வானொலி நிலையத்தின் இணையதளம் மூலம், லாசா வன்செயல்களைக் கவனித்து வருகிறேன் என்று பிரேசில் நேயர் Rubens Pedroso , தன் கடிதத்தில் கூறினார். "சிறப்பு கட்டுரைகளைப் படித்த பின், சமூக ஒழுங்கை அலட்சியம் செய்து அப்பாவி மக்களுக்கு தீங்கு விளைக்கும் தலாய்லாமா குழு நடத்திய இத்தகைய வன்செயல்கள் பற்றி, நான் பெரும் அதிர்ச்சியடைகிறேன். முன்பு, அவர்கள் இரக்க குணமுடையவராகவும், நேர்மையானவராகவும் கருதினேன். இந்த வன்முறைச் சம்பவங்கள், எனது முந்தைய கருத்துக்களை முற்றிலும் மாற்றியுள்ளன. இப்பிரச்சினைக்கான சீன அரசின் தீர்வு முறை, உகந்ததாகவும் சரியானதாகவும் இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இந்நிகழ்ச்சியில் புண்படுத்தப்பட்ட மக்கள், கூடிய விரையில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமென நான் விரும்புகிறேன். தலாய்லாமா, அச்சம்பவங்களின் கடுமையான தன்மையையும், தன் தவற்றையும் உணர்ந்து கொண்டு, இந்த துன்பகரமான நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன் என்று Rubens Pedroso தெரிவித்தார்.
|
|