• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 14:09:13    
உருகுவே நேயர் Alberto யின் கருத்து

cri
சீன தேசிய மக்கள் பேரவை நிறைவு பெற்ற நாளான மார்ச் 18ம் நாள் அன்று, உருகுவே நேயர் Alberto மின்னஞ்சல் அனுப்பி, திபெத் தன்னாட்சி பிரதேசத்தில், சில பிரிவினைவாதிகள் செய்யும் அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களை கண்டித்தார். அவர் சீனாவில் நீண்ட காலமாக கவனம் செலுத்தும் சீன வானொலி நிலையத்தின் நேயராவார். பிரிவினைவாதிகளின் பொய் கூற்றுகளால் திகைப்பு ஆடையாமல் இருக்கின்றோம். திபெத், சீனாவின் இறையாண்மை பிரதேசத்தின் ஒரு பகுதியாகும் என்பதை நாம் மறைக்கமாட்டோம். திபெத் விடுதலை செய்யப்படும் முன், அங்கே மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் மறைக்கமாட்டோம். அப்போதைய அடிமை அமைப்பு முறையில், பல அடிமைகளின் ரத்தத்தால், சில அடிமை உரிமையாளர்கள் உயர் தகுநிலை பெற்று, ஆடம்பரமாக வாழ்ந்தனர். அடி நிலையில் இருந்த அடிமைகளோ மிக அடிப்படையான வாழ்வு நிலைமைகளையும் மனித கௌரவத்தையும் கொண்டிருக்கவில்லை. அப்போது, பின்தங்கிய பொருளாதாரம், வீழ்ச்சியான பண்பாடு, கண்டிப்பான சமூக தகுநிலை முறை, பொது மக்களின் கல்வி அறிவின்மை என்ற நிலை தான் திபெதில் இருத்தது. தற்போது, தேசிய தன்னாட்சி பிரதேச முறையிலும், சீன அரசின் கவனத்திலும், சீன மக்களின் ஆதரவிலும், திபெத் மக்கள் தங்களை ஆள்வதோடு, கால்நடை, வேளாண் மற்றும் சுற்றுலா துறைகளை வளர்க்கின்றனர். அவர்களுடைய குழந்தைகள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடிகிறது. அவர்களின் மதம், பண்பாடு மற்றும் பழக்கவழக்கம் மிக பெரிய அளவில் மதிப்பு அளிக்கப்படுகிறது. சீன தேசிய மக்கள் பேரவையில், மக்கள் பேரவையின் பிற சிறுபான்மை தேசிய இன பிரதிநிதிகள் போல், மக்கள் பேரவையில் திபெத் பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்து, நாட்டின் வளர்ச்சி்க்குப் பங்களிப்பது காணப்படுகிறது. கடந்த காலத்தில், இது நினைக்கவே முடியாது. திபெத் அருமையான எதிர்காலம் பெற வேண்டும் என்று Alberto விருப்பம் தெரிவித்தார்.
திபெதில் கலவரம் ஏற்படுத்த தலாய் குழு திட்டமிட்டது. அதனால் உள்ளூர் திபெத் மற்றும் சீன மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்குப் பெரியளவில் இழப்பு ஏற்பட்டதோடு, பாமர மக்கள் கொல்லப்பட்டு, கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு, சீர்குலைக்கப்பட்டு, மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். இது மாபெரும் குற்றமாகும். திபெத் எப்போதும் சீன இறையாண்மை பிரதேசங்களின் ஒரு பகுதியாகும். கலவரத்தைச் சமாளித்து, திபெத் அமைதியை பேணிக்காத்த சீனாவின் முயற்சிகளுக்கு Alberto ஆதரவு தெரிவித்தார். அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களில் பாதிக்கப்பட்ட திபெத் மற்றும் சீன குடிமக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக Alberto கூறினார்.