ருமேனிய நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து
cri
திபெத் நிலைமை பற்றிய தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டமை போலித்தனமான, நெடுநோக்கு பார்வை இல்லாத, பொறுப்பற்ற செயலாகும். ருமேனிய சோஷலிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் Adrian Severin நேற்று பிரசல்சில் இவ்வாறு கூறினார். திபெத் சுதந்திரவாதிகளின் சட்டவிரோதமான செயல்களையும் சீனாவின் நிலையான நிலைப்பாட்டையும் ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் கொள்ளாமல், இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது என்று அவர் கூறினார். சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் மனித உரிமை பிரச்சினையை அரசியலாக்கியுள்ளனர் என்பதை இது காட்டுகின்றது என்றும், இதன் விளைவாக திபெத் பிரச்சினையைச் சிறப்பாக தீர்ப்பதற்கு வழிகோலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திறன் இழக்கப்படக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஐரோப்பிய-சீன உறவு நெருக்கடிக்குள்ளாக்கப்படக் கூடும் என்றும் அவர் கூறினார்.
|
|