ஏமாற்றி மோசடி செய்வதில் ஈடுபட்ட தலாய் லாமா
cri
லாசா வன்முறை குற்றச் சம்பவங்களுக்குப் பின், தலாய் லாமா இங்கும் அங்கும் பொய் கூற்றைப் பரப்பி, உண்மையை மூடிமறைக்க முயன்று வருகின்றார். தனது பொய் கூற்று கண்டுபிடிக்கப்பட்ட பின், அவர் தொடர்ந்து ஏமாற்றி மோசடி செய்வதில் ஈடுபடுகின்றார் என்று சீன சின் குவா செய்தி நிறுவனத்தின் விமர்சன கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. அண்மையில், பாடம் கொடுப்பது என்ற பெயரில் தலாய் லாமா சில நாடுகளில் பயணம் மேற்கொண்டார். நேற்று ஜப்பானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், தான் சீன அரசுக்கு எதிரானவரல்ல. தொடக்கம் முதல் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆதரிப்பதாக அவர் கூறினார். திபெத் சுதந்திரவாதிகளுக்கு கட்டளையிட்டு, வன்முறைச் செயல் மற்றும் ஒலிம்பிக் தீபத்தை பறித்துச் செல்வது என்பது, தான் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆதரிக்கும் செயல்களா என்று கட்டுரை கேட்டது. நடைமுறையில், உலக மக்கள் தலாய் லாமாவின் உண்மை தோற்றத்தை அறிந்து கொள்ளலாம் என்று கட்டுரை கூறுகின்றது.
|
|