பிரான்ஸ் செய்தி ஊடகப் பிரமுகர்களின் கண்டனம்
cri
சீனா பற்றிய பிரான்ஸின் செய்திகளில் தப்பு எண்ணங்கள் அதிகம். உண்மை படி, நடு நிலையுடன் சீனா பற்றி செய்திகளை அறிவிக்க வேண்டும். அண்மையில், பிரான்ஸ் தொலைகாட்சி குழுமம், பிரான்ஸ் தொலைக்காட்சி 2, உலக செய்தி ஏடு முதலிய செய்தி ஊடகங்களுக்கு அனுப்பிய வெளிப்பட மடலில் பிரான்ஸின் மூத்த செய்தித் தொடர்பாளர் Abdella ouaby இவ்வாறு கூறியுள்ளார். திபெத் உள்ளிட்ட சீனப் பிரச்சினைகள் மீது பிரான்ஸ் நாட்டவர் பலர் தவறான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். பிரான்ஸின் முக்கிய செய்தி ஊடகங்கள் பொது மக்களுக்கு உண்மையை மூடிமறைத்துள்ளன என்பதும், சீனாவில் நிகழ்ந்த பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் பற்றி அவை அறிவிக்கவில்லை என்பதும் தான் இதற்கான காரணமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். Abdella ouaby 30 ஆண்டு காலமாக, செய்தி ஊடகங்களில் பணி புரிந்தவர். பல அரசுத் தலைவர்களை அவர் பேட்டி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|