• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 16:46:28    
அர்ஜென்டீனாவிலான தீபத்தொடரோட்ட நடவடிக்கை

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் தீபம், உள்ளூர் நேரப்படி 10ம் நாள் பிற்பகல் அர்ஜென்டீனாவின் தலைநகர் BuenosAiresஐ அடைந்தது. ஒலிம்பிக் தீபத்தோடரோட்டம் அர்ஜென்டீனாவில் நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 5மணிக்கு, பெய்சிங் ஒலிம்பிக் தீபத்தை கொண்ட சிறப்பு விமானம், BuenosAiresஇன் எசெய்ஸா விமான நிலையத்தை அடைந்தது. அர்ஜென்டீனாவிலுள்ள சீனத் தூதர், அர்ஜென்டீன ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர், அர்ஜென்டீன அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏறக்குறைய நூறு பேர் விமான நிலையத்தில் தீபத்தை வரவேற்றனர்.

அதே நாள், அர்ஜென்டீன அரசுத் தலைவர் Cristina Fernandez de Kirchnerஅம்மையார் அர்ஜென்டீனாவிலுள்ள சீனத் தூதரகத்தில் பேசுகையில், ஒலிம்பிக் தீபத்தொடர்ரோட்ட நடவடிக்கை BuenosAiresஇல் வெற்றிகரமாக நடைபெறுவது உறுதி என்றார். அத்துடன், பெய்சிங் ஒலிம்பிக விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

BuenosAires,பெய்சிங் ஒலிம்பிக் தீபத்தொடரோட்ட நடவடிக்கை போக்கிலான ஒரே ஒரு தென் அமெரிக்க நாடாகும். 3மணி நேரம் நீடிக்கும் தீபத் தொடரோட்டம் 13 கிலோமீட்டர் தொலைவு செல்லும் என்று தெரிய வருகின்று.