அரசியல் நோக்கத்தை நனவாக்க, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை பயன்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்ப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கௌரவத் தலைவர் Juan Antonio Samaranch கூறியுள்ளார். மேலும், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு பின், சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு அளவு மேலும் விரிவாக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றி ஸ்பெயினின செய்தி ஊடகத்திற்கு அளித்த சிறப்புபபேட்டியில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். பெய்சிங் ஒலிம்பிக் குழுவின் ஆயத்தப் பணி மிகச் சிறப்பாக அமைந்ததைஎன்பதை Samaranch பாராட்டினார். கடந்த 30 ஆண்டுகளில், சீனாவின் மாபெரும் முன்னேற்றத்தை தான் கண்டுள்ளதாகவும், சீன பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, சீன மக்களுக்கு நலன்களை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தவிரவும், இனம், மதம், அரசியல் ஆகிய பேதங்கள் இல்லை இல்லை என்பது, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கொள்கையாகும். அரசியல் நோக்கத்தை நனவாக்க ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை பயன்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
|