• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-12 15:55:01    
சீனாவின் உள் விவகாரமான திபெத் விவகாரம்

cri
திபெத் விவகாரம் முழுமையாக சீனாவின் உள் விவகாரமாகும். நடுவண் அரசுக்கும் தலாய்லாமா குழுவுக்குமிடையிலான முரண்பாடு தேசிய இன பிரச்சினையல்ல. மத பிரச்சினையும் மனித உரிமை பிரச்சினையும் அல்ல. தாய்நாட்டை பிளவுப்படுத்தி அதன் ஒற்றுமையை பேணுவதென்ற பிரச்சினையாகும் என்று சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் தெரிவித்துள்ளார். இன்று ஹுச்சிந்தாவ் சீனாவின் ஹைநான் மாநிலத்தின் சையா நகரில் ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் கேவின் ரூட்டை சந்தித்துரையாடிய போது இவ்வாறு தெரிவித்தார்.
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசாவிலும் மற்ற இடங்களிலும் ஏற்பட்ட கடும் வன்முறை சம்பவங்கள் பற்றி குறிப்பிடுகையில் இந்த சம்பவங்கள் குறிப்பிட்டவர் பறைசாற்றிய அமைதியான ஆர்பாட்டம் அல்ல. பச்சை வன்முறை குற்றங்களாகும் என்று ஹுச்சின்தாவ் வலியுறுத்தி கூறினார்.
உரையாடல் நடத்துவதற்கான நடுவண் அரசின் கதவு தலாய்லாமாவுக்கு திறக்கப்படுகிறது. இருதரப்புக்குமிடையிலான கலந்தாய்வுக்கான தடை நடுவண் அரசிடத்தில் நிலவவில்லை. தலாய்லாமாவிடத்தில் தான் நிலவுகின்றது. தலாய்லாமாவுக்கு நல்லெண்ணம் உண்மையாக இருந்தால் இது நடைமுறைக்கு வர வேண்டும் என்று ஹுச்சிந்தாவ் உறுதிபடுத்தினார்.
திபெத் மற்றும் தைவான் மீது சீனா கொண்டுள்ள அரசுரிமையை ஆஸ்திரேலியா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரே சீனா என்ற கொள்கை பின்பற்றுவது மாறாது என்று ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் கேவின் ரூட் கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றி பெற வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.