ஒலிம்பிக்கை அரசியல்மயமாக்குவதற்கு சில வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் அண்மையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கான முயற்சி தோல்வியடைவதாக, கருத்து தெரிவித்ததோடு, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தைச் சீர்கலைக்கும் நடவடிக்கைகளையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளவை தலைவர் Somnath Chatterjee பேசுகையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, முழு உலகின் மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியாகும். அரசியல் பிரச்சினையுடன் தொடர்பு கொள்ள வேண்டாம். தீபத் தொடரோட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு இந்தியா முழு மூச்சுடன் உத்தரவாதம் அளிக்கும் என்று குறிப்பிட்டார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கெளரவ தலைவர் Samaranch அண்மையில் பேட்டியளித்த போது, அரசியல் நோக்கத்துடன், ஒலிம்பிக்கைப் பயன்படுத்தும் செயல்களை எதிர்க்கின்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றப் பின், சீனா மேலும் திறக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஒலிம்பிக்கை அரசியல்மயமாக்கும் கூற்றை, ரஷிய நாடாளுமன்றத்தின் கீழவையைச் சேர்ந்த சர்வதேச விவகார குழுத் தலைவர் Kosachev ஏப்ரல் 11ம் நாள் வன்மையாக குறைகூறினார். கவனத்தை ஈர்க்க, சிலர் ஒலிம்பிக்கைச் சீர்குலைக்கும் செயல்களை நடத்துவது அனுமதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
|